கோட் டிவாரின் மக்களாட்சிக் கட்சி

கோட் டிவாரின் மக்களாட்சிக் கட்சி (Parti Démocratique de la Côte d'Ivoire) ஐவரி கோஸ்ட் (கோட் டிவார்) நாட்டின் ஒரு அரசியல் கட்சி ஆகும். இக் கட்சி 1946-ம் ஆண்டு Félix Houphouët-Boigny என்பவரால் தொடக்கப்பட்டது.

இந்தக் கட்சியின் தலைவராக ஹென்றி கோனன் பேடீ (Henri Konan Bédié) என்பவரும் பொதுச் செயலாளராக அல்ஃபொன்சே மாடி (Alphonse Djédjé Mady) என்பவரும் பணியாற்றுகின்றனர்.

இந்தக் கட்சி Nouveau Réveil என்ற இதழை வெளியிடுகிறது. இதன் இளையோர் அமைப்பு Forum National des Jeunes du PDCI-RDA ஆகும்.

2000 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 94 இடங்கள் பெற்றது.

வெளி இணைப்புகள்தொகு