கோட்டாபய ராஜபக்ச

(கோத்தாபய ராஜபக்ச இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோட்டாபய ராசபக்ச (Nandasena Gotabaya Rajapaksa, சிங்களம்: ගෝඨාභය රාජපක්ෂ; நந்தசேன கோட்டாபய ராஜபக்ச; பிறப்பு: 20 சூன் 1949)[6] இலங்கை அரசியல்வாதியும், இராணுவ அதிகாரியும், இலங்கையின் தற்போதைய அரசுத்தலைவரும் ஆவார். இவர் 2005 முதல் 2015 வரை இவரது தமையன் மகிந்த ராசபக்சவின் அரசில் பாதுகாப்பு அமைச்சு செயலாளராகப் பணியாற்றி, இலங்கை ஆயுதப் படைகளுக்குத் தலைமை தாங்கி ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

கோட்டாபய ராஜபக்ச
Gotabaya Rajapaksa
Nandasena Gotabaya Rajapaksa.jpg
கோட்டாபய ராஜபக்ச
8-வது இலங்கை அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
18 நவம்பர் 2019
முன்னவர் மைத்திரிபால சிறிசேன
பாதுகாப்பு மறும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்
பதவியில்
நவம்பர் 2005 – 8 சனவரி 2015
குடியரசுத் தலைவர் மகிந்த ராசபக்ச
பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க
தி. மு. ஜயரத்தின
முன்னவர் அசோகா ஜெயவர்தன
பின்வந்தவர் பி. எம். யு. டி. பசநாயக்க
தனிநபர் தகவல்
பிறப்பு நந்தசேன கோட்டாபய ராஜபக்ச
20 சூன் 1949 (1949-06-20) (அகவை 73)
வீரகெட்டிய, இலங்கை
குடியுரிமை
 • இலங்கையர் (2003 வரை)
 • அமெரிக்கர் (2003-05)[1][2]
 • அமெரிக்க, இலங்கை இரட்டைக் குடியுரிமை (2005-19)[3][4]
 • இலங்கையர் (2019 முதல்)[5]
அரசியல் கட்சி இலங்கை பொதுசன முன்னணி
வாழ்க்கை துணைவர்(கள்) அயோமா ராஜபக்ச
பிள்ளைகள் மனோஜ்
பெற்றோர் டி. ஏ. ராஜபக்ச (தந்தை)
தந்தின ராஜபக்ச (தாயார்)
படித்த கல்வி நிறுவனங்கள் கொழும்புப் பல்கலைக்கழகம்
இணையம் https://gota.lk/
படைத்துறைப் பணி
பட்டப்பெயர்(கள்) கோட்டா
பற்றிணைவு இலங்கை
கிளை இலங்கை படைத்துறை
பணி ஆண்டுகள் 1971–1992
தர வரிசை லெப். கேணல்
படையணி கஜபா படையணி
படைத்துறைப் பணி 1-வது கஜபா படையணி
ஜென. சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு அகாதமி
சமர்கள்/போர்கள் ஈழப் போர்
1987-89 ஜேவிபி புரட்சி

இலங்கையின் தெற்கு மாகாணத்தில் பிரபலமான அரசியல் குடும்பத்தில் பிறந்த கோத்தாபய கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்று, இலங்கை படைத்துறையில் 1971 ஏப்ரலில் இணைந்தார். தியத்தலாவை இராணுவப் பயிற்சி மையத்தில் அடிப்படைப் பயிற்சியைப் பெற்றுக் கொண்ட பின்னர், பல காலாட் படையணிகளில் சேர்ந்து பணியாற்றினார். ஈழப்போரின் ஆரம்பக் கட்டங்களில் கஜபா படையணியில் சேர்ந்து சமர்களில் நேரடியாக ஈடுபட்டார். வடமராட்சி நடவடிக்கை, திரிவித பலயா போன்ற போர் நடவடிக்கைகளிலும், 1987-89 ஜேவிபி புரட்சியின் போது கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். இராணுவத்தில் இருந்து இளைப்பாறிய பின்னர், தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டம் கொண்டார். 1998 இல் ஐக்கிய அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். 2005 இல் இலங்கை திரும்பிய பின்னர், தனது தமையனாரின் அரசில் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரது காலத்தில் இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுடனான போரில் முழுமையாக ஈடுபட்டு 2009 இல் போரை வென்றது. 2006 திசம்பரில் விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் இருந்து தப்பினார். ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலித் தலைவர்களைக் கொல்ல உத்தரவிட்டமை போன்ற பல போர்க்குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.[7] போருக்குப் பின்னர், கோத்தாபய ராசபக்ச பல நகர அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தார். 2015 அரசுத்தலைவர் தேர்தலில் மகிந்த ராசபக்ச தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அரசுப் பதவிகளை இழந்தார்.[8] 2018 இல், 2019 அரசுத்தலைவர் தேர்தலுக்கு ஒரு முக்கிய வேட்பாளராக வெளிக் கொணரப்பட்டார். இத்தேர்தலில் இவர் மகிந்த ராசபக்சவின் தலைமையிலான இலங்கை பொதுசன முன்னணியின் சார்பில் சிங்கள தேசியவாத, பொருளாதார மேம்பாடு, தேசிய பாதுகாப்பு ஆகிய கொள்கைகளை முன்னெடுத்து,[9][10] தீவின் சிங்கள வாக்காளர்களின் பெரும் ஆதரவோடு 52.25% வாக்குகள் பெற்று 7-வது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவராக 2019 நவம்பர் 17 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்தொகு

 1. "Police to probe Gota’s citizenship, passports". Daily FT (Colombo, Sri Lanka). 10 August 2019. http://www.ft.lk/front-page/Police-to-probe-Gota-s-citizenship-passports/44-683723. பார்த்த நாள்: 27 October 2019. 
 2. "Gota’s Lanka citizenship in doubt, candidacy under cloud". தி ஐலண்டு (Colombo, Sri Lanka). 22 September 2019. Archived from the original on 24 ஜூன் 2019. https://web.archive.org/web/20190624080639/http://www.island.lk/index.php?page_cat=article-details. பார்த்த நாள்: 27 October 2019. 
 3. Singh, Anurangi (29 September 2019). "Gota’s citizenship challenged in Court of Appeal". Sunday Observer (Colombo, Sri Lanka). http://www.sundayobserver.lk/2019/09/29/news/gota%E2%80%99s-citizenship-challenged-court-appeal. பார்த்த நாள்: 27 October 2019. 
 4. "People want non-traditional politicians - Gotabhaya Rajapaksa". www.dailymirror.lk (in English). 2019-01-14 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unrecognized language (link)
 5. "CT finds Gota's true U.S. renunciation certificate". Ceylon Today. 2019-08-01. 2019-10-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-08-01 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 6. On the trail of Victory, சண்டே ஒப்சேர்வர், 16 மே 2010
 7. "CHRONOLOGY-Attacks blamed on Sri Lanka's Tamil Tigers". Reuters. 2008-01-08. http://www.reuters.com/article/featuredCrisis/idUSCOL66488. 
 8. "Basnayake new Defense Secretary". டெய்லிமிரர். 10 சனவரி 2015. http://www.dailymirror.lk/60921/b-m-u-d-basnayake-new-defense-secretary. 
 9. இலங்கை: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிப்பு
 10. கோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இவர் யார்? அவர் பின்னணி என்ன?

வெளி இணைப்புகள்தொகு

அரசியல் பதவிகள்
முன்னர்
மைத்திரிபால சிறிசேன
இலங்கை அரசுத்தலைவர்
2019–இன்று
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டாபய_ராஜபக்ச&oldid=3416561" இருந்து மீள்விக்கப்பட்டது