கோபால் சுவரூப் பதக்
இந்திய அரசியல்வாதி
கோபால் சுவரூப் பதக் (Gopal Swarup Pathak) இந்தியாவின் நான்காவது குடியரசுத் துணைத் தலைவராக ஆகத்து 1969 முதல் ஆகத்து 1974 வரை பணியாற்றியுள்ளார்.
கோபால் சுவரூப் பதக் | |
---|---|
4வது இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் | |
பதவியில் 31 ஆகத்து 1969 – 30 ஆகத்து 1974 | |
குடியரசுத் தலைவர் | வி. வி. கிரி பக்ருதின் அலி அகமது |
பிரதமர் | இந்திரா காந்தி |
முன்னையவர் | வி. வி. கிரி |
பின்னவர் | பசப்பா தனப்பா ஜாட்டி |
கருநாடக ஆளுநர் | |
பதவியில் 13 மே 1967 – 31 ஆகத்து 1969 | |
முன்னையவர் | வி. வி. கிரி |
பின்னவர் | தர்ம வீரா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பரேலி, வடமேற்கு மாகாணங்கள், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (தற்பொழுது உத்தரப் பிரதேசம், இந்தியா) | 26 பெப்ரவரி 1896
இறப்பு | 4 அக்டோபர் 1982 | (அகவை 86)
அரசியல் கட்சி | சுயேச்சை |
முன்னாள் கல்லூரி | அலகாபாத் பல்கலைக்கழகம் |
இவர் குடியரசுத் தலைவராக பதவியேற்காத முதல் இந்திய துணைத் தலைவர் ஆவார்.
இளமை
தொகுஇவர் பிப்ரவரி 26, 1896 அன்று உத்திரப்பிரதேச மாநிலம் பரேலியில் பிறந்தார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர் ஆவார்.
பணி
தொகு1945-46களில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதியரசராக பொறுப்பேற்றார். 1960-67 காலத்தில் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் 1966-67ஆம் ஆண்டுகளில் சட்ட அமைச்சராகவும் 1967-69 ஆண்டுகளில் மைசூர் மாநில (தற்கால கருநாடக மாநிலம்) ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.[1][2][3]
இறப்பு
தொகுகோபால் சுவரூப் பதக், அக்டோபர் 4, 1982ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "He is Proud Past Alumni Allahabad University" பரணிடப்பட்டது 7 சூலை 2012 at Archive.today. Allahabad university Alumni Association web page say
- ↑ " Internet Archive of Proud Past Alumni"
- ↑ "" Internet Archive of Proud Past Alumni"