கோபிநாத் சந்திரன்
(கோபிநாத் (நிகழ்ச்சி தொகுப்பாளர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோபிநாத் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தனியார் பண்பலை ஒன்றில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார். இவர் அறந்தாங்கியில் பிறந்தவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். தமிழ் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் தன்னுடைய தமிழ் மொழிநடைக்காகவும், தனிப்பாங்கிற்காகவும்(style) இவர் மிகவும் அறியப்படுகிறார். இவர் தொகுத்து வழங்கும் சில முக்கியமான நிகழ்ச்சிகள்:
- நீயா நானா
- விஜய் விருதுகள்
- குற்றமும் பின்னணியும், நடந்தது என்ன?
- உன்னால் முடியும்
கோபிநாத் | |
---|---|
பிறப்பு | சூலை 4, 1975 அறந்தாங்கி |
இருப்பிடம் | சென்னை |
தேசியம் | இந்தியர் |
கல்வி | பி.பி.ஏ |
பணி | தொகுப்பாளர், எழுத்தாளர் |
பணியகம் | விஜய் தொலைக்காட்சி |
அறியப்படுவது | நீயா நானா |
பெற்றோர் | சந்திரன், குமுதம் |
வாழ்க்கைத் துணை | துர்கா |
பிள்ளைகள் | வெண்பா |
தற்போது ஒரு எழுத்தாளராகவும் பரிணமித்து வருகிறார். இவர் எழுதியுள்ள புத்தகங்கள்:
- "தெருவெல்லாம் தேவதைகள்",
- "ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!",
- "நேர் நேர் தேமா",
- "நீயும் நானும்"
விருதுகள்
தொகு- இந்தியா டுடே வழங்கிய இந்தியாவின் இளம் சாதனையாளர்கள் விருது- - 2006
- ஜூனியர் சேம்பர் இன்டர்நேசனல் அமைப்பு வழங்கிய சிறந்த இளம் இந்தியர் விருது - 2008 ஆம் ஆண்டு