கொமாரலிங்கம்

(கோமரலிங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கொமாரலிங்கம் (ஆங்கிலம்:Komaralingam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். இப்பேருராட்சியானது விவசாயம் சார்ந்த பேருராட்சியாகும்.

கொமாரலிங்கம்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் மடத்துக்குளம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

13,642 (2011)

426/km2 (1,103/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 32 சதுர கிலோமீட்டர்கள் (12 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/komaralingam

இது குமரலிங்கம் மேற்கு, குமரலிங்கம் கிழக்கு என இரண்டு வருவாய் கிராமங்களையும், குமரலிங்கம், சமராயப்பட்டி, பெருமாள்புதூர், குருவக்குளம் என 4 குக்கிராமங்களையும் கொண்டது.

அமைவிடம்

தொகு

குமரலிங்கம் பேரூராட்சியிலிருந்து, திருப்பூர் 75 கிமீ; மடத்துக்குளம் 8 கிமீ; உடுமலைப்பேட்டை 15 கிமீ; பழநி 15 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

32 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 110 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மடத்துக்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,854 வீடுகளும், 13,642 மக்கள்தொகையும் கொண்டது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. குமரலிங்கம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Komaralingam Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொமாரலிங்கம்&oldid=3861077" இலிருந்து மீள்விக்கப்பட்டது