கோரி நிலவுக்குழி

கோரி (Cori) நிலவில் உள்ளதோர் விண்கல் வீழ் பள்ளம் ஆகும். இது நிலாவின் தெற்கு அரைக்கோளத்தில் பின்புறத்தில் அமைந்துள்ளது. இது பால்டெட் நிலவுக்குழிக்கு வடக்கே ஓர் கிண்ணக்குழி விட்ட தொலைவில் அமைந்துள்ளது. வடகிழக்கில் கிரிசோம் நிலவுக்குழி உள்ளது. இதற்கு நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணியும் உலகில் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணியுமான கெர்டி கோரி [1] பெயர் இடப்பட்டுள்ளது.

கோரி நிலவுக்குழி
Cori crater 5026 h1.jpg
சரிவான லூனார் ஓர்பிடர் 5 எடுத்த படம்
ஆள்கூறுகள்50°36′S 151°54′E / 50.6°S 151.9°E / -50.6; 151.9ஆள்கூறுகள்: 50°36′S 151°54′E / 50.6°S 151.9°E / -50.6; 151.9
விட்டம்65 கிமீ
கிண்ணக்குழி ஆழம்தெரியவில்லை
Colongitude154° at sunrise
Eponymகெர்டி தெ. கோரி

இது ஒர் வட்ட வடிவான கிண்ணக்குழி ஆகும்; இதன் வெளிப்புற விளிம்பு சற்றே தேய்ந்துள்ளது. மேற்கு சுற்றில் உட்புறச் சுவரில் மண்சரிவால் படியமைப்பு ஏற்பட்டுள்ளது. வடக்கு சுவரில் சிறு வெளி நோக்கிய உடைப்பு உள்ளது. கிழக்கு உட்புற சுவரின் மீது சிறு கிண்ணக்குழி சார்ந்துள்ளது. உட்புறத் தரை சிறுசிறு கிண்ணக்குழிகளுடன் காணப்பட்டாலும் எவ்வித விளிம்புகளோ குறிப்பிடத்தக்க மாற்றங்களோ இல்லை.

மேற்சான்றுகள்தொகு

  1. USGS/IAU (Oct 18, 2010). "Cori on Moon". Gazetteer of Planetary Nomenclature. USGS Astrogeology. பார்த்த நாள் 2012-03-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரி_நிலவுக்குழி&oldid=2746662" இருந்து மீள்விக்கப்பட்டது