கோலர் ஆறு (மத்தியப் பிரதேசம்)

கோலார் ஆறு (Kolar River) என்பது நர்மதா ஆற்றின் வலது கரையில் அமைந்த துணை ஆறாகும். இது 101 கிமீ நீளம் கொண்டது. இதன் முழு பகுதியும் மத்தியப் பிரதேசத்தில் உள்ளது. [1]

ஆற்றுப் படுகைதொகு

கோலார் ஆறானது செஹோர் மாவட்டத்தின் விந்திய மலைத்தொடரில் இந்த ஆறு மத்தியப் பிரதேசத்தின், ராய்சேன் மாவட்டத்தில் நஸ்ருல்லாஹஞ்ச் அருகே நர்மதையை நோக்கி தெற்கே செல்கிறது. இதன் மொத்த வடிகால் பகுதி 1,347 km2 ஆகும். இது இரண்டு மாவட்டங்களிலும் பரந்து விரிந்துள்ளது.[1] இந்த ஆற்றின் மேல் பகுதி 350 முதல் 600 மீட்டர் உயரமான பகுதியில் உள்ளது, அதில் பெரும்பாலானவை வெப்பமண்டல இலையுதிர் காடுகள் உள்ள பகுதியாகும். ஜொலியாபூருக்கு அருகிலுள்ள சமவெளிகளில் இந்த ஆறு பட்டுப்போகிறது. மேல் பள்ளத்தாக்கின் பெரும்பகுதி மலைகளாக உள்ளதால் குறைந்த அளவு நிலப்பகுதியில் விவசாயம் செய்யப்படுகிறது பெரும்பாலும் கோதுமை மற்றும் பயறு போன்றவை பயிரிடப்படுகிறது. ஆற்றின் கீழ்பகுதி ஓரளவு தாழ்வான நிலப்பரப்பு மற்றும் குறைவான சாய்வு கொண்ட நிலப்பரப்பு கொண்ட, மழைக்காலங்களில் நீர் ஊடுருவ அனுமதிக்கும் வளமான மண்ணாகவும் உள்ளது.[1]

கோலார் அணைதொகு

சேஹோரிலுள்ள லக்வெரி அருகே, கோலார் ஆற்றின் குறுக்கே ஒரு அணை கட்டப்பட்டுள்ளது. இது போபால் நகரத்திற்கு நீர் வழங்கவும், நீர்ப்பாசனம் மற்றும் உள்நாட்டு மீன்வளர்ப்புக்கு பயன்படுகிறது.[2][3]

மேற்கோள்கள்தொகு