கோலி சோடா

விஜய் மில்டன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கோலி சோடா 2014ஆம் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை விஜய் மில்டன் இயக்கினார். சேரனின் தயாரிப்பில் அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் எட்டு வருடங்கள் கழித்து கோலி சோடா படத்தை இயக்கினார். இவர் பிரியமுடன், வனயுத்தம், தீபாவளி, நெஞ்சினிலே, சாக்லெட், ஆட்டோகிராப், காதல், காதலில் விழுந்தேன், வழக்கு எண் 18/9, உட்பட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பசங்க திரைப்படத்தில் நடித்த 4 சிறுவர்கள் இந்தத் திரைப்படத்தில் கதாநாயகர்களாக நடித்தனர். இத்திரைப்படத்திற்கு அருணகிரி இசையமைத்தார்.[1][2][3][4]

கோலி சோடா
திரையரங்கு சுவரொட்டி
இயக்கம்விஜய் மில்டன்
தயாரிப்புபரத் சீனி
கதைவிஜய் மில்டன் (கதை)
பாண்டிராஜ் (வசனம்)
இசைஎஸ். என். அருணகிரி
அ.சீலின் (BGM)
நடிப்புகிஷோர்
ஸ்ரீராம்
பாண்டி
முருகேஷ்
ஒளிப்பதிவுவிஜய் மில்டன்
படத்தொகுப்புஆன்டனி
விநியோகம்திருப்பதி பிரதர்ஸ்
வெளியீடு2014. 01. 24
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலி_சோடா&oldid=3920386" இலிருந்து மீள்விக்கப்பட்டது