கோளப் பிறழ்ச்சி

கோளப் பிறழ்ச்சி (Spherical aberration) என்பது கோள ஆடியில் அல்லது வளைபரப்பாடியில் (குவி, குழி ஆடிகளில்) ஒளிக்கதிர்கள் விழும் போது எல்லாக் கதிர்களும் ஒரே புள்ளியில் குவியாமல் ஒன்றிற்கு மேற்பட்ட குவியங்களைக் கொடுப்பதைக் குறிக்கும். ஒரே குவியத்திற்குப் பதில் பல குவியங்களைக் கொடுக்கும் இப்பண்பு கோளப்பிறழ்ச்சி எனப்படும். ஆடிகளில் மட்டுமில்லாமல் வில்லைகளிலும் இது நிகழும். கவனமாக வில்லைத் தொகுதிகளைத் தேர்ந்து எடுப்பதன் மூலம் கோளப் பிறழ்ச்சியினைத் தவிர்க்கலாம்.[1][2][3]

மேலுள்ள படம்:கோளப் பிறழ்ச்சியற்ற வில்லையில் படும் ஒளிக்கதிர்கள் அனைத்தும் ஒரே புள்ளியில் குவிகின்றன. கீழுள்ள படம்: கோளப் பிறழ்ச்சி: படுகதிர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளிகளில் குவிகின்றன.

மேற்கோள்கள்

தொகு
  1. Boudrioua, Azzedine; Rashed, Roshdi; Lakshminarayanan, Vasudevan (2017-08-15). Light-Based Science: Technology and Sustainable Development, The Legacy of Ibn al-Haytham (in ஆங்கிலம்). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-351-65112-7.
  2. Villarino, Mark B (2007). "Descartes' perfect lens". arXiv:0704.1059 [math.GM].
  3. Machuca, Eduardo (July 5, 2019). "Goodbye Aberration: Physicist Solves 2,000-Year-Old Optical Problem". PetaPixel. பார்க்கப்பட்ட நாள் July 10, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோளப்_பிறழ்ச்சி&oldid=3893756" இலிருந்து மீள்விக்கப்பட்டது