கோழியின வளர்ப்புப் பறவைகள்

கோழி வளர்ப்பு (Poultry) (/ˈpltri//ˈpltri/) என்பது கோழி, கோழியினப் பறவைகளை மனிதர்கள் முட்டை, இறைச்சி, இறகுகளுக்காக வளர்ப்பது சார்ந்த சொற்றொடராகும். இவ்வாறு வளர்க்கப்படும் பறவைகள் கேலோயன்சிரி வரிசையைச் சார்ந்த, அதிலும் குறிப்பாக, கல்லிபார்மஸ் வரிசையைச் சார்ந்தவையாகும். இதில் கோழி, காடை, துருக்கை இனப்பறவைகள் உள்ளடடங்கும் இது இறைச்சிக்காகக் கொல்லப்படும் புறாக்குஞ்சு போன்ற பிற பறவையினங்களையும் உள்ளடக்கும். ஆனாலும், இந்த இனங்களைச் சார்ந்த, விளயாட்டுக்கும் உணவுக்கும் வேட்டையாடிப் பெறும் கான்பறவைகளை இது உள்ளடக்குவதில்லை. சிறிய விலங்கு) எனப் பொருள்படும் புல்லுஸ் (pullus) எனும் இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து தோன்றிய பிரெஞ்சு மொழி ச் சொல்லான பெளல் (poule) என்பதிலிருந்தே ஆங்கிலச் சொல் பவுல் பெறப்பட்டது. பறவைகள் வீட்டின விலங்குகளாக வளர்க்கப்படுவது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றுள்ளது. மனிதர்கள் தாங்கள் காட்டுப் பகுதிகளில் கிடைத்த முட்டைகளை அடைகாத்துக் குஞ்சு பொரிப்பதற்காகத் தங்களது வீட்டில் கொண்டு வந்து வைத்ததன் விளைவாக இது தொடங்கியிருக்க வேண்டும். பிறகு, இது பறவைகளை மனிதன் சிறைப்பிடித்து வைத்துக்கொள்வதையும் சேர்த்துக் கொண்டது. வீட்டில் வளர்க்கப்பட்ட கோழிகளைச் சேவல் சண்டையிடவும், பின்னர் குயில்களை அவற்றின் இசைக்காகவும் பழக்கப்படுத்தினர். விரைவிலேயே, பறவைகளைச் சிறையில் வைத்து வளர்ப்பது உணவுக்கான மூலமாக இருப்பது உணரப்பட்டது. வேகமான வளர்ச்சி, முட்டையிடும் திறன், இணக்கம், சிறகுகளின் தோற்றம், அமைதியான குணம் ஆகியவற்றிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் பல நூற்றாண்டுகளாக நடந்துவருகிறது. நவீன வளர்ப்பினங்கள் தங்கள் காட்டு மூதாதையர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டனவாக உள்ளன. சில பறவைகள் இன்னும் சிறு கூட்டங்களாக வளர்க்கப்படுகின்றன. இன்று சந்தையில் கிடைக்கக்கூடிய பெரும்பாலான பறவை இனங்கள் வணிக நோக்கத்துடன் அமைந்துள்ள நிறுவனங்களில் வளர்க்கப்பட்டவையேயாகும். உலகளாவிய நிலையில் கோழி இறைச்சி, முதலாவதான பன்றி இறைச்சியோடு சேர்ந்து மிகப் பரவலாக சாப்பிடப்படும் இரண்டாவது இடத்தைப் பிடித்த , இறைச்சி வகையாகிறது. ;[1] முட்டையும் கோழி இறைச்சியும் உயர்தரப் புரதம் நிறைந்த, ஆனால் கொழுப்பு விகிதம் குறைந்த உணவாக அமைகிறது. அனைத்து கோழி இறைச்சி வகையும் ஒழுங்காக கையாளப்பட்டு, போதுமான அளவு சமைக்கப்படுவது, உணவு நஞ்சாகும் இடரைக் குறைக்கும்.

உலகக் கோழியின வளர்ப்புப் பறவைகள்

வரையறை தொகு

"கோழியின வளர்ப்புப் பறவைகள்" என்பது காலங்காலமாகச் சில பயன்பாடுகளுக்காக நிலத்தில் வாழும் காட்டுப்பறவைகள் (கல்லிபார்மஸ்), நீரில் வாழும் கோழியினப் பறவைகள் (அன்செரிபார்மஸ்) ஆகியவற்றைப் பிடித்து வீட்டில் வளர்க்கப்படுவதைக் குறிக்கப் பயன்பட்டு வந்த சொல்லாகும். ஆனால் பாடும் பறவைகள் மற்றும் கிளிகள் போன்ற கூண்டில் வாழும் பறவைகள் இவ்வகைப்பாட்டில் வராது. இறைச்சி அல்லது முட்டைக்காக உருவாக்கப்பட்ட கோழிகள், வான்கோழிகள் மற்றும் வாத்துகள் உள்ளிட்ட வீட்டு வளர்ப்புப் பறவைகள் என "கோழியினப் பறவைகள்" வரையறுக்கப்பட முடியும். மேலும் உணவுக்காகப் பயன்படுத்தப்படும் இத்தகைய பறவைகளின் இறைச்சிக்கும் இதே சொல் பயன்படுத்தப்படுகிறது.[2] பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் மேலே குறிப்பிட்ட அதே பறவைக் குழுக்களைப் பட்டியலிடுகிறது. ஆனால், அது கினியாக்கோழி, புறாக்குஞ்சு (இளம் புறாக்கள்) ஆகியவற்றையும் உள்ளடக்குகிறது.[3] ஆர். டி. கிராஃபோர்டின் கோழி இனப்பெருக்கம் மற்றும் மரபியல் என்ற நூலில் இளம்புறாக்கள் தவிர்க்கப்பட்டாலும், சப்பானியக் காடை, பெருஞ்செம்போத்து போன்றவை பட்டியலுக்குள் சேர்க்கப்படுகின்றன, பிந்தையது பெரும்பாலும் கைப்பற்றி வளர்க்கப்பட்டு, பின்னர் காடுகளில் விடப்படுகிறது.[4] எடுமண்டு திக்சன் 1848 ஆண்டைய , அழகு, வீட்டுக் கோழியினம்: வரலாறும் மேலாண்மையும்மென்ற தன் நூலில் மயில், கின்னிக்கோழி, பேசாத அன்னம், வான்கோழி அனைத்து வாத்துகள் முசுகோவி வாத்து உள்ளிட்ட அனைத்து பெண்வாத்துகள், பந்தாம் சிறுகோழிகள் உள்ளிட்ட அனைத்துக் கோழிகள் ஆகிய கோழியிப வள்ர்ப்பு பறவைகளுக்கு தனி இயல்களை ஒதுக்கியுள்ளார்.[5]

எடுத்துகாட்டுகள் தொகு

பறவை காட்டு மூதாதை விட்டினமாக்கம் பயன்பாடு படம்
கோழி செங்காட்டுக் கோழி தென் கிழக்காசியா முட்டையும் இறைச்சியும்  
வீட்டு வான்கோழி காட்டு வான்கோழி மெக்சிகோ இறைச்சி  
வீட்டு வாத்து காட்டு வாத்து பல இடம் முட்டையும் இறைச்சியும்  
வாத்து கிரேலாகு வாத்து பல இடம் முட்டையும் இறைச்சியும்  
கின்னிக்கோழி கொண்டைக் கினியாக் கோழி ஆப்பிரிக்கா இறைச்சி  
வீட்டுப்புறா கல்புறா நடுவண் கிழக்குப் பகுதி இறைச்சி  

கோழிகள் தொகு

 
கொண்டையும் தாடியும் உள்ள சேவல்

கோழிகள் என்பவை சிவந்த சதையுள்ள தாடியும் தலையில் கொண்டை]]யும் அமைந்த நடுநிலையளவும் நிமிர்ந்த கழுத்தும் கொண்ட பறவைகளாகும் . இவற்றின் ஆண்கள் கூடுதலான வண்ணமிகு இறகுகளும் பெரிய உடலும் உள்ளவை இவை சேவல்கள் எனப்படுகின்றன. இவைகோழிகள் தரையில் வாழும் உடற் பருத்த அனைத்துண்னிகள் ஆகும். இவை தம் இயற்கையான சூழலில் இலைக்குப்பைகளுக்கு இடையில் உள்ல விதைகளையும் முதிகுநாணில்லாத சிறுவிலங்குகளையும் தேடியுண்ணும். இவை அஞ்சினால் ஒழிய பறப்பதில்லை. ஆனால், வேகமாக ஓடிப் புதரில் ஒளிந்துகொள்ளும். [6]இன்றைய வீட்டுக் கோழி (காலஸ் காலஸ் டொமஸ்டிக்கஸ்-Gallus gallus domesticus) ஆசியாவின் செங்காட்டுக் கோழியில் இருந்து சாம்பற் காட்டுக் கோழியின் பண்புநலங்களைப் புகுத்தி வளர்க்கப்பட்டதாகும்.[7] இதன் வீட்டினமாக்கம் 7000 இல் இருந்து 10,000 ஆண்டுகட்கு முன்பு நிகழ்துள்ளது. இதன் புதைபடிவ எலும்புகள் வடகிழக்குச் சீனாவில் கிமு 5,400 ஆண்டளவில் கிடைத்துள்ளது. தொல்லியலாளர்கள் இந்த வீட்டினமாக்கம் சேவற் சண்டைக்காகவே மேற்கொள்ளப்பட்டதாகக் கருதுகின்றனர். சேவல்கள் முனைப்பான போராளிகளாகவே இருந்துள்ளன. 4,000 ஆண்டுக்கு முன்பு கோழி சிதுவெளிக்கும் அதற்கு 250 ஆண்டுக்குப் பிறகு எகுபதிக்கும் கோழிகள் வந்துள்ளன. அங்கு அவை சேவற்சண்டைக்குப் பயன்பட்டதோடு கருவளக் குறியீடாகவும் கருதப்பட்டன. உரோமர்கள் அதைத் தெட்டைகளைய்வமாக வணங்கினர். எகுபதியர் செயற்கை முறையில் முட்டைகளக் குஞ்சுபொரிக்க வைக்கும் நுட்பத்தை உருவாக்கினர்.[8] இதற்குப் பிறகு வீட்டுக் கோழிகள் முட்டையும் இறைச்சியும் தருவதால் உணவுக்காக கோழிவளர்த்தல் உலகம் முழுவதும் பரவியது.[9]

கோழிகளின் வீட்டினவாக்கத்துக்குப் பிறகு அவற்ரில் பல புதிய வளர்ப்பினங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றில் வெண்கால் கோழியைத் தவிர பெரும்பாலானவை யவும் கலப்பினக் கோழி வகைகளே.[6]னைவை 1800 ஆண்டளவுக்குள் பேரளவில் வளர்க்கப்படலாயின, தற்கால உயர்பெருக்க கோழிப் பண்ணைகள் 1920 இல் இருந்தே ஐக்கிய இராச்சியத்தில் அமையலாயின. இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடனே ஐக்கிய அமெரிக்காவில் இவ்வகைக் கோழிப் பண்ணைகள் உருவாகலாயின. இருபதாம்நூற்றாண்டின் இடைப்பகுதிக்குள், கோழியிறைச்சித் தொழில்துறை முட்டையிடும் தொழில்துறையை விட முதன்மையான இடத்தை வகிக்கலானது. பல தேவைகளை ஈடுகட்டும் வகையில் கோழியின வளர்ப்பு பல வளர்ப்பினங்களை உருவாக்கியது; ஆண்டுக்கு முந்நூறு முட்டையிடும் மென்சட்டகக் கோழிகளுருவக்கப்பட்டன; வேகமாக வளரும் இறைச்சி மிக்க இளங்கோழிகள் உருவாக்கப்பட்டன; கணிசமான முட்டையும் கொழித்த இறைச்சியும் நல்கும் பயன்மிகு கோழிவகைகளும் உருவாகின. முட்டையிடும் தொழ்லிதுறல்யில் சேவல்கள் தேவையில்லை என்பதால் முட்டை பொரித்தவுடனே கண்டுபிடித்துப் பிரிக்கப்பட்டன. இறைச்சிவகைகள் சிலவேளைகலில் அவற்ரின் வீரியத்தைக் குறைக்க வேதியியலாக தணிக்கப்பட்டன.[3] கேபான் பறவையின்(capon) இறைச்சி மென்மையாகவும், விரும்பத்தகுந்த உணவு நாற்றுமும் உடையது[10]

 
சேவற் சண்டைநடக்கும் உரோம பலவண்ண ஓவியம்

பாந்தாம் குறுங்கோழிகள் வீட்டுக் கோழிகளின் குட்டைவகையாகும். இது செந்தர வீட்டுக் கோழியின் சிறிய வளர்ப்பினமாகவோ ,கால்லது அதன் பெரியவகை மாற்று ஏதுமற்ற உண்மைப் பாந்தாமாகவோ அமையலாம். இப்பெயர் சாவகத்தில் உள்ள பாந்தம் நகரின் பெயரால் அமைந்ததாகும். [11] இங்கிருந்து ஐரோப்பிய மீகாமன்கள் அல்லது கடலோடிகள் கப்பல் உணவுத் தேவைகளுக்காகக் கொண்டுவந்தனர். இவை செந்தரவகையை விட கால்மடங்கு அல்லது மூன்றில் ஒரு பங்கு சியதாகும். .அதேபோல இவை சிறிய முட்டைகளையேஇடுகின்றன. இவை அழகு நோக்கில் காட்சிப்படுதவே சிறு உடைமையாளர்களாலும் பொழுதுபொக்காளர்களாலும் வளர்க்கப்படுகின்றன.[12]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

  1. "Sources of the world's meat supply in 2012". FAO. பார்க்கப்பட்ட நாள் 26 August 2018.
  2. "Poultry". The American Heritage: Dictionary of the English Language 4th edition. (2009). Houghton Mifflin Company. 
  3. 3.0 3.1 "Poultry". Encyclopædia Britannica. (June 6, 2013). Encyclopædia Britannica, Inc.. 
  4. Crawford, R. D. (1990). Poultry Breeding and Genetics. Elsevier. பக். 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-444-88557-9. http://www.cabdirect.org/abstracts/19900183085.html. 
  5. Dixon, Rev Edmund Saul (1848). Ornamental and Domestic Poultry: Their History, and Management. Gardeners' Chronicle. பக். 1. https://books.google.com/?id=Z7E9AAAAIAAJ&printsec=frontcover&dq=poultry+history#v=onepage&q=poultry%20history&f=false. 
  6. 6.0 6.1 Card, Leslie E. (1961). Poultry Production. Lea & Febiger. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8121-1241-2. http://www.cabdirect.org/abstracts/19610102428.html. 
  7. Eriksson, Jonas; Larson, Greger; Gunnarsson, Ulrika; Bed'hom, Bertrand; Tixier-Boichard, Michele; Strömstedt, Lina; Wright, Dominic; Eriksson J, Larson G, Gunnarsson U, Bed'hom B, Tixier-Boichard M; Vereijken, Addie; Randi, Ettore; Jensen, Per; Andersson, Leif; et al. (2008), "Identification of the yellow skin gene reveals a hybrid origin of the domestic chicken", PLoS Genetics, 4 (2): e1000010, doi:10.1371/journal.pgen.1000010.eor, PMC 2265484, PMID 18454198{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)
  8. Adler, Jerry; Lawler, Andrew (June 1, 2012). "How the Chicken Conquered the World". Smithsonian Magazine. http://www.smithsonianmag.com/history/how-the-chicken-conquered-the-world-87583657/?no-ist. பார்த்த நாள்: April 14, 2014. 
  9. Storey, A. A.Expression error: Unrecognized word "etal". (2012). "Investigating the global dispersal of chickens in prehistory using ancient mitochondrial DNA signatures". PLoS ONE 7 (7): e39171. doi:10.1371/journal.pone.0039171. பப்மெட்:22848352. Bibcode: 2012PLoSO...739171S. 
  10. Mrs A Basley (1910). Western poultry book. பக். 112–15. https://books.google.com/books?id=10JDAAAAIAAJ. 
  11. "Online Etymology Dictionary". Etymonline.com. பார்க்கப்பட்ட நாள் February 21, 2014.
  12. "Breed gallery". The Poultry Club of Great Britain. பார்க்கப்பட்ட நாள் February 21, 2014.