கோவிந்தச்சந்திரன் (சந்திர வம்சம்)

சந்திர வம்ச அரசன்

கோவிந்தச்சந்திரன் (Govindachandra) (ஆட்சிக் காலம் பொ.ச. 1020 – 1045) [1] கிழக்கு வங்காளத்தில் ஆட்சியிலிருந்த சந்திர வம்சத்தின் கடைசியாக அறியப்பட்ட ஆட்சியாளனான் ஆவான்.

கோவிந்தச்சந்திரன்
ஆட்சிக்காலம்1020 – 1045
முன்னையவர்இலதாகசந்திரன்
மரபுசந்திர வம்சம்
அரசமரபுசந்திர வம்சம்
தந்தைஇலதாகசந்திரன்
தாய்சௌபாக்யதேவி[1]
மதம்பௌத்தம்[1]

வரலாறு தொகு

திருமலை கல்வெட்டின் படி, இவனது ஆட்சியின் போது, – பொ.ச.1024க்கு இடையில் சோழ மன்னன் [[இராசேந்திர சோழன்|இராஜேந்திர சோழனால் பெரும் படையெடுப்பை எதிர்கொண்டான். கல்வெட்டில் இவன் வங்காளதேசத்தைச் சேர்ந்த கோவிந்தச்சந்திரன் என்று அடையாளம் காணப்படுகின்றான்.

கிபி 1049 இன் தொடக்கத்தில், கலாச்சூரி மன்னர் கர்ணதேவனும் (1042-1072 வரை ஆட்சி செய்தவன்) கோவிந்தச்சந்திரன் மீது தாக்குதலைத் தொடங்கினான் (இது சந்திர வம்சத்தின் வீழ்ச்சியாக இருக்கலாம்). ஆட்சியில் சோர்வுற்று அரியணையைத் துறந்ததாக வங்காள நாட்டுப்புற பாடல்கள் கூறுகிறது.

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 Alam, Aksadul (2012). "Govindachandra". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Govindachandra.