கோவிந்த் மாளவியா
பண்டிதர் கோவிந்த் மாளவியா (Govind Malaviya; 14 செப்டம்பர் 1906-27 பிப்ரவரி 1961) என்பவர் ஓர் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரரும், கல்வியாளரும் அரசியல்வாதியும் ஆவார்.[1]
கோவிந்த் மாளவியா | |
---|---|
இந்திய வட்டமேசை மாநாடுகள் தனது தந்தை மதன் மோகன் மாளவியா உடன் 18 நவம்பர் 1931, இலண்டன் | |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1952-1961 | |
முன்னையவர் | பி. வி. கேசுகர் |
பின்னவர் | குன்வர் கிருஷ்ணா வர்மா |
தொகுதி | சுல்தான்பூர், உத்தரப் பிரதேசம் |
6வது துணைவேந்தர்-பனாரசு இந்து பல்கலைக்கழகம்]] | |
பதவியில் 6 திசம்பர் 1948 - 21 நவம்பர் 1951 | |
முன்னையவர் | அம்ர்நாத் ஜா |
பின்னவர் | நரேந்திர தேவா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 செப்டம்பர் 1902 |
இறப்பு | 27 பெப்ரவரி 1961 புது தில்லி, இந்தியா | (அகவை 58)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | உஷா பட் (தி. 1922–1961) |
பிள்ளைகள் | 1 மகன் (கிரிதர் மாளவியா), 7 மகள்கள் |
வாழ்க்கை வரலாறு
தொகுபுகழ்பெற்ற வழக்கறிஞரும் கல்வியாளருமான பண்டித மதன் மோகன் மாளவியாவின் இளைய மகன் மாளவியா ஆவார். தர்மஞானோபதேச சமசுகிருத பாடசாலை மற்றும் அலகாபாத்தில் உள்ள ஏ. வி. பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து, பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 1920இல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இணைந்த பிறகு, இவர் விடுதலை இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். எட்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார். 1930ஆம் ஆண்டில், அகில இந்திய காங்கிரசு செயற்குழுவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட இவர், செப்டம்பர் 1931இல் இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் தனது தந்தையின் செயலாளராகக் கலந்து கொண்டார்.[1]
1945இல், இவர் மத்தியச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946இல் இந்திய அரசியலமைப்பு சபையின் உறுப்பினராகவும், 1950இல் தற்காலிக நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆனார்.[2] 1947 திசம்பரில் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் இணை-துணைவேந்தராக நியமிக்கப்பட்ட மாளவியா, 1948 திசம்பரில் துணைவேந்தராகப் பணியாற்றினார்.[1]
1952ஆம் ஆண்டில், மாளவியா இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளராக உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவை (இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபை) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5] 1957இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1961இல் பதவியிலிருந்தபோது இறந்தார்.[2]
திருமண வாழ்க்கை
தொகுமாளவியா உஷா பட் (பிப்ரவரி 2002) என்பவரை 12 திசம்பர் 1922 அன்று மணந்தார். இந்தத் தம்பதியினருக்கு கிரிதர் மாளவியா (நீதிபதி) என்ற ஒரு மகனும், ஏழு மகள்களும் இருந்தனர்.[6][1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Parliament of India: Who's Who (1950) (PDF). New Delhi. 1950. p. 61.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link)Parliament of India: Who's Who (1950) (PDF). New Delhi. 1950. p. 61.{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ 2.0 2.1 "Obituary Reference". Lok Sabha Debates. Second Series 50: 1983–1984. 27 February 1961. https://eparlib.nic.in/bitstream/123456789/55113/1/lsd_02_13_27-02-1961.pdf. பார்த்த நாள்: 18 July 2021.
- ↑ Swati Upadhye (2015). Madan Mohan Malaviya: Great Personalities of India. Diamond Pocket Books Pvt Ltd. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-288-2954-3.
- ↑ Anil Baran Ray (1977). Students and politics in India: the role of caste, language, and region in an Indian university. Manohar. p. 93. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780836400038.
- ↑ "General Elections, India, 1957- Constituency Wise Detailed Results" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 9 June 2016.
- ↑ "History of BHU". Archived from the original on 23 September 2015. பார்க்கப்பட்ட நாள் 24 January 2018.