கோவூர் கிழார் (திருவள்ளுவமாலை)

கோவூர் கிழார் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் சிலர் காலப் பாதையில் காணப்படுகின்றனர்.

திருவள்ளுவமாலை பாடல்களில் ஒன்று கோவூர் கிழார் பாடியதாக அடைவு செய்யப்பட்டுள்ளது. சங்ககாலக் கோவூர் கிழார், பாட்டியல் நூல் பாடிய கோவூர் கிழார் ஆகிய புகழ்பெற்ற புலவர்களின் பெயரை வைத்துக்கொண்ட புலவர் இந்த கோவூர் கிழார்.

திருவள்ளுவமாலையில் உள்ள இவரது பாடல்

அறம்முதல் நான்கும் அகலிடத்தோர் எல்லாம்
திறமுறத் தேர்ந்து தெளியக் - குறள்வெண்பாப்
பன்னிய வள்ளுவனார் பால்முறைநேர் ஒவ்வாதே
முன்னை முதுவோர் மொழி

இந்தப் பாடல் சொல்லும் செய்தி

திருக்குறள் முப்பால் எனப் போற்றப்படும் நூல். முன்னோர் இதற்கு முப்பால் எனப் பெயரிட்டது பொருந்தாது. வள்ளுவனார் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருளையும் கூறியுள்ளார் - என்கிறார் இந்தப் புலவர்.

திருவள்ளுவர் பாடாமல் விட்டுவிட்ட வீட்டுநெறியை ஔவையார் பாடினார். அந்த நூலின் பெயர் ஔவை குறள் என்பது எனவும் கூறுகின்றனர்.