கௌரங்கா பாலம்

கௌரங்கா பாலம் (Gouranga Bridge) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தின் நதியா மாவட்டத்தில் நபாத்விப் மற்றும் கிருஷ்ணாநகர் ஆகியவற்றுக்கிடையேயுள்ள, 588 மீட்டர் (1929 அடி) நீளம் உடைய ஒரு பாலம் ஆகும். இது பாகீரதி ஆற்றின் குறுக்கே உள்ளது.[1] இது மேற்கு வங்கத்தின் மாநில நெடுஞ்சாலை 8-இன் ஒரு பகுதியாகும்.[2]

கௌரங்கா பாலம்
গৌরাঙ্গ সেতু
கௌரங்கா பாலம்
அதிகாரப் பூர்வ பெயர் கௌரங்கா சேது
போக்குவரத்து மோட்டார் வாகனங்கள், நடையாளர்கள், மிதிவண்டிகள்
தாண்டுவது பாகீரதி ஆறு
இடம் நபத்விப், நதியா மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா
பராமரிப்பு பொதுப்பணித்துறை பர்த்வான் மண்டலம்-I (2016 வரை)
பொதுப்பணித்துறை நதியா மண்டலம்-I (2016 தொடங்கி)
வடிவமைப்பு துளையிடப்பட்ட அடிக்கட்டுமான முறை
கட்டுமானப் பொருள் வலுவூட்டப்பட்ட காரை
மொத்த நீளம் 558 மீ (1929 அடி)
வருடாந்திர சராசரி தினசரி போக்குவரத்து சரக்கு மற்றும் பயணியர் வாகனங்கள்
கட்டியவர் காமன் இந்தியா லிமிடெட் நிறுவனம்
கட்டுமானம் தொடங்கிய தேதி 1972
கட்டுமானம் முடிந்த தேதி சனவரி 1983
திறப்பு நாள் சனவரி 16, 1983; 41 ஆண்டுகள் முன்னர் (1983-01-16)
சுங்கத் தீர்வை இல்லை
அமைவு 23°23′09″N 88°22′00″E / 23.385928°N 88.366555°E / 23.385928; 88.366555

வரலாறு

தொகு

1972 ஆம் ஆண்டில், அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர். போலா சென் நபத்விப் மற்றும் கிருஷ்ணாநகர் ஆகியவற்றை இணைக்கும் கௌரங்கா பாலத்திற்கான அடிக்கல் நாடடினார். இந்தப் பாலத்தைக் கட்டுவதற்கான பொறுப்பை காமன் இந்தியா லிமிடெட் நிறுவனம் எடுத்துக் கொண்டது.[3] 1983 ஆம் ஆண்டு, சனவரி 16 ஆம் நாள் மேற்கு வங்க இடது முன்னணி அரசின் பொதுப்பணித்துறை அமைச்சரான ஜடின் சக்ரபர்த்தியால் இந்தப் பாலம் திறந்து வைக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. People, India Parliament House of the; Sabha, India Parliament Lok (1998). Lok Sabha Debates (in ஆங்கிலம்). Lok Sabha Secretariat. p. 347.
  2. 2.0 2.1 "পায়ের নীচেই বালি সরছে গৌরাঙ্গ সেতুর". anandabazar.com (in Bengali). 2018-09-12. பார்க்கப்பட்ட நாள் 2020-12-04.
  3. Governor, MJF Lion Uday Narayan Shaw, District (2020-09-23). Lions 322C1 District Directory (2020-21): Digital Edition (in ஆங்கிலம்). Signpost Celfon. In Technology.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரங்கா_பாலம்&oldid=4139957" இலிருந்து மீள்விக்கப்பட்டது