க. இராசாராம்

இந்திய அரசியல்வாதி

க. இராசாராம் (K. Rajaram, 26.08.1926 - 8.2.2008), தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் ஆவார்.

கே. இராசாராம்
K Rajaram.jpg
தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் (Food and Civil Supplies)
பதவியில்
1991–1992
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் (பனமரத்துப்பட்டி)
பதவியில்
1991–1996
முன்னவர் எஸ். ஆர். சிவலிங்கம்
பின்வந்தவர் எஸ். ஆர். சிவலிங்கம்
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் (பனமரத்துப்பட்டி சட்டமன்றத் தொகுதி)
பதவியில்
1980–1989
முன்னவர் என். சுப்பாராயன்
பின்வந்தவர் எஸ். ஆர். சிவலிங்கம்
தமிழ்நாடு தொழிற்சாலை மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்
பதவியில்
1985–1989
முதலமைச்சர் எம்.ஜி.ஆர்
தமிழ்நாடு சட்ட மன்ற சபாநாயகர்
பதவியில்
1980–1985
முதலமைச்சர் எம்.ஜி.ஆர்
முன்னவர் முனு ஆதி
பின்வந்தவர் பி. ஹெச். பாண்டியன்
தொழிலாளர் நலத்துறை
பதவியில்
1973–1976
முதலமைச்சர் மு. கருணாநிதி
தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் (Housing and Backward Classes)
பதவியில்
1971–1973
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் (சேலம் II)
பதவியில்
1971–1976
முன்னவர் இ. ஆர். கிருஷ்ணன்
பின்வந்தவர் எம். ஆறுமுகம்
மக்களவை உறுப்பினர் (சேலம் மக்களவைத் தொகுதி]]
பதவியில்
1967–1971
பிரதமர் இந்திரா காந்தி
முன்னவர் எஸ். வி. இராமசாமி
பின்வந்தவர் இ. ஆர். கிருட்டிணன்
மக்களவை உறுப்பினர் (கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி)
பதவியில்
1962–1967
பிரதமர் ஜவஹர்லால் நேரு,
லால் பகதூர் சாஸ்திரி,
இந்திரா காந்தி
முன்னவர் சி. ஆர். நரசிம்மன்
பின்வந்தவர் எம். கமலநாதன்
தனிநபர் தகவல்
பிறப்பு ஆகஸ்ட் 29, 1926
இறப்பு பிப்ரவரி 8, 2008 (82 அகவையில்)
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி திமுக,
மக்கள் திமுக,
அதிமுக
தொழில் அரசியல்வாதி

வாழ்க்கைதொகு

இராசாராம் சேலம் மாவட்டத்தின் ஆத்தூரில் பிறந்தவர். இவரது தந்தை பெ. கஸ்தூரி வருவாய்த்துறை அலுவலரும், நீதிக்கட்சி அனுதாபியுமாவார்.[1] இராசாராம் தருமபுரியில் பள்ளிப் படிப்பை முடித்து, பின்னர் சேலத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.

அச்சகம்தொகு

க. இராசாராம் கல்லூரிக் கல்வியை முடித்துப் பட்டம் பெற்றதும் சென்னை சின்னத்தம்பி தெருவில் கதவெண் நான்கைக் கொண்டிருந்த கட்டிடத்தில் தன் தந்தை கஸ்தூரியின் பெயரில் "கஸ்தூரி லித்தோ ஒர்க்ஸ்" என்ற அச்சகத்தை நடத்திவந்தார். 1959 ஜனவரி 16ஆம் நாள் முதல் கே. ஏ. மதியழகனை ஆசிரியராகவும் வெளியிடுபவராகவும் கொண்டு வெளிவந்த தென்னகம் என்ற வார இதழை அச்சிடுபவராகத் திகழ்ந்தார்.[2]

அரசியலில்தொகு

கல்லூரிக் கல்விக்கு பின், திராவிடர் கழகத்தில் இணைந்து ஈ. வெ. இராமசாமியின் செயலராகப் பணியாற்றினார். அண்ணாவுடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவியர்களில் ஒருவர். 1967இல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மு. கருணாநிதி, எம். ஜி. ஆர்., ஜெயலலிதா அமைத்த அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியவர்.

1977-ல் இரா. நெடுஞ்செழியன், இரா. செழியன் ஆகியோர் உடன் சேர்ந்து 'மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்' எனும் கட்சியைத் உருவாக்கினார். மக்கள் திமுகவின் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும், துணை பொதுச் செயலாளராக இவரும் இருந்தனர். கட்சி தொடங்கிய 30 நாள்களில் மக்கள் தி.மு.கவை அண்ணா தி.மு.கவுடன் இணைத்தனர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுற்றபோது வி. என். ஜானகி அணியில் 1989 சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றிணைந்தபின் 1991 தேர்தலில் பனமரத்துப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்று ஜெயலலிதா அமைச்சரவையில் உணவுத் துறை அமைச்சரானார். சிலகாலத்தில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் இவர் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தார்.[3]

மறைவுதொகு

2008 பிப்ரவரி 8 ஆம் நாள் சிறுநீரகக் கோளாறால் சென்னையில் காலமானார்.

சுயசரிதைதொகு

இவர் "ஒரு சாமானியனின் நினைவுகள்" என்ற தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார்.[4]

வகித்த பதவிகள்தொகு

  • 1962இல் கிருட்டிணகிரி நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்.
  • 1967இல் சேலம் நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்.
  • 1971இல் திமுக அமைச்சரவையில் வீட்டு வசதி அமைச்சர்.
  • 1980இல் தமிழகச் சட்ட மன்றப் பேரவைத் தலைவர்.
  • 1984இல் அதிமுக அமைச்சரவையில் தொழில் துறை, வேளாண்மைத் துறை அமைச்சர்.
  • 1991இல் அதிமுக அமைச்சரவையில் உணவுத் துறை அமைச்சர்

மேற்கோள்தொகு

  1. தொடரட்டும் தமிழ்த்தொண்டு, கட்டுரை, க. இராசாராம், ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றம் வெள்ளி விழா மலர் 1998
  2. 16-1-1959ஆம் நாளிட்ட தென்னகம் இதழின் கடைசிப்பக்கம்
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-06-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-07-14 அன்று பார்க்கப்பட்டது.
  4. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._இராசாராம்&oldid=3547240" இருந்து மீள்விக்கப்பட்டது