க. கவிதா
கல்வகுண்ட்ல கவிதா (K. Kavitha) தெலுங்கானாவைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1978-ஆம் ஆண்டில் மார்ச்சு பதின்மூன்றாம் நாளில் பிறந்தார். இவர் ஐதரபாத்தின் பஞ்சாரா மலைக்குன்றில் வாழ்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், நிசாமாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]