க. நாகராசன்

க. நாகராசன் (Nagarajan. K)(பிறப்பு 04 சனவரி 1942) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரைப் பகுதியினைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வியினை திண்டுக்கல் தூய மேரி உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரிக் கல்வியினை மதுரை தியாகராசர் கல்லூரியிலும் முடித்துள்ளார். நாகராசன் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக வடமதுரை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1971 வடமதுரை திமுக 35,989 58.75[2]

மேற்கோள்கள் தொகு

  1. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்” [Tamil Nadu Legislative Assembly "Who's Who"]. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. பக். 241 at=241. 
  2. Election Commission of India. "1971 Tamil Nadu Election Results" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._நாகராசன்&oldid=3483918" இலிருந்து மீள்விக்கப்பட்டது