க. ஸ்ரீராமுலு நாயுடு

இந்திய அரசியல்வாதி

கமலம்பூண்டி ஸ்ரீராமுலு நாயுடு (K. Sriramulu Naidu) நீதிக் கட்சியின் தலைவராகவும், பெரியாரின் சமகாலத்தவராகவும், 1930 மற்றும் 1940களில் இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் முதல் மாநகரத் தந்தையாகவும் இருந்தார். இவர் வெலமா சாதியைச் சேர்ந்தவர். இவரது தந்தை ஆங்கிலேயர்களுக்கான சென்னை மாகாணத்தின் தலைமை மொழிபெயர்ப்பாளராக இருந்தார். மேலும் இவர் செய்த சேவைக்காக ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் ராவ் பகதூரை பட்டத்தினை வழங்கினார். ஜார்ஜ் டவுன், கண்டப்ப செட்டி தெரு, திருமணங்களுக்கும் பிற புனிதமான செயல்பாடுகளுக்கும், அதாவது திருமணங்களுக்காக, விளக்குகள் மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்களை மட்டுமே பெற்றுக்கொண்டு அளித்த ஒரு பரோபகாரர் ஆவார். தற்போது சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தையும் நன்கொடையாக அரசாங்கத்திற்கு வழங்கினார்.[1]

இவர் கடவுள் நம்பிக்கை மிகுந்தவர். தனது நம்பிக்கையின் ஒரு பகுதியாக, இவர் நம்பர் 13 கண்டப்ப செட்டி தெருவை நன்கொடையாக வழங்கினார். இதிலிருந்து வரும் வருவாயினைக் கொண்டு சென்னை ஜார்ஜ் டவுன், நம்பர் 5 தாதா முத்தியப்பன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்னா சீதாரமஞ்சநேய சன்னதியின் கைங்கரியத்திற்கு ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் இவரது வேண்டுகோள்.


முன்னர்
அப்துல் ஹமீத் கான்
சென்னை மாநகராட்சி மன்றத் தலைவர்
(மேயர்)

1936-1937
பின்னர்
ஜெ. சிவசண்முகம் பிள்ளை

மேற்கோள்கள் தொகு

  1. "History of Chennai Airport". Office of the Commissioner of Customs. Archived from the original on 11 March 2012. பார்க்கப்பட்ட நாள் 3 Dec 2011.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._ஸ்ரீராமுலு_நாயுடு&oldid=3147311" இலிருந்து மீள்விக்கப்பட்டது