சகிப்புத்தன்மை

சகிப்புத்தன்மை என்பது பிடிக்காத அல்லது ஏற்காத ஒரு செயல், பொருள், அல்லது நபரை, அவற்றிற்கான அனுமதியை மறுக்கக் கூடிய நிலையில் உள்ள ஒருவர் அவ்வாறு செய்யாமல் இருப்பதாகும்.[சான்று தேவை] ரிக்வேதத்தில் "உண்மை ஒன்று தான், ஆனால் அறிஞர்கள் அதை வெவ்வேறு பெயர்களால் அழைக்கின்றனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[1] இதை ஒத்த வகையில், மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட போதும் இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்து அறிஞர்கள் தங்கள் வெறுப்பைக் காட்டும் போதும் அதை நுட்பமாகவும் அடையாள ரீதியாக மட்டுமே காட்டியுள்ளனர். அதுவும் தங்கள் நம்பிக்கையின் உயர்ந்த தன்மையைக் காட்டுவதற்காக அவ்வாறு செய்துள்ளதற்கே வாய்ப்புள்ளது. நெடுங்காலமாக தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க இந்துக்கள் வன்முறையை கையாளாமல் எதிர்ப்பாளர்களிடம் இருந்து விலகியே சென்றுள்ளனர். பொதுவாக உலகில் இந்து மதம் ஒன்றே பல வேளைகளில் மற்ற மதங்களிடம் கடினமான காலங்கள் மற்றும் சோதனை நிலைமைகளில் குறிப்பிடத்தக்க சகிப்புத்தன்மையைக் காட்டியுள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்கள் மூலம் பரவிய புத்த மதத்திற்குக் கூட இச்சிறப்பு கிடையாது. மற்ற மதங்களைப் பற்றி குறை சொல்வது மற்றும் அவற்றைத் தாழ்ந்ததாகக் காட்டி அம்மதத்தைப் பின்பற்றுவோரை தம் மதத்திற்கு மாற்றுவது என்பது எக்காலத்திலும் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாக இந்து மதத்தில் இருந்தது கிடையாது.[2]

சகிப்புத்தன்மை சிலை, கெரா, செர்மனி.
போர் நினைவுச்சின்ன சிலுவை மற்றும் யூத மக்களின் மெனோரா, ஆக்ஸ்போர்டு.

உசாத்துணைதொகு

  1. "Hinduism – a general introduction". Religioustolerance.org. 2012-06-21 அன்று பார்க்கப்பட்டது.
  2. "evidence of tolerance". Jayaram V/Aniket Patil. 2014-08-17 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகிப்புத்தன்மை&oldid=2587885" இருந்து மீள்விக்கப்பட்டது