சகீதா கதூன் செர்வானி

சகீதா கதூன் செர்வானி (Zahida Khatun Sherwani பிறப்பு; பிறப்பு 18 டிசம்பர் 1894 - 2 பிப்ரவரி 1922; சில நேரங்களில் ஜெய் கே ஷீன் என்று அறியப்படுகிறார்) [1] ஓர் இந்தியக் கவிஞர் மற்றும் உருது மொழி எழுத்தாளர் மற்றும் பெண்களின் உரிமைகளுக்கான ஆர்வலராகவும் இருந்தார். ஜெய் கே ஷீன் (அல்லது இசட்- கே-எஸ்) மற்றும் நுசாத் என்ற புனைப்பெயர்களில் அவர் தனது கவிதைகளை வெளியிட்டார், ஏனெனில் அவரது பழமைவாத சமூகம் பெண்களை கவிதை எழுதவோ அல்லது பெண்களின் உரிமைகளை நிலைநிறுத்தும் இயக்கங்களைத் தொடங்கவோ அனுமதிக்கவில்லை. [2] [3] இவர் செர்வானி பழங்குடியினரின் நில உரிமையாளர்களின் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். [2] உருது மொழியில் இ8வரது கவிதைகள் மற்றும் கசல்கள், "பெண்ணிய கண்ணோட்டத்தினைக்" கொண்டவை, இளைஞர்களுக்கு காதல் ஈர்ப்பைக் கொண்டிருந்தன. [4]

சுயசரிதைதொகு

சகிதா கதூன் செர்வானி டிசம்பர் 1894 18 இல் வட இந்தியாவில் ,அலிகார் மாவட்டத்தில் பிகம்பூரில் பிறந்தார். அவரது தந்தை நவாப் சர் முஹம்மது முசம்மியுல்லா கான் (1865-1938). செர்வானி குலத்தினர் கல்வித்துறையில் உயர் நிலை கொண்ட அறிவார்ந்த மக்கள், அவர்கள் முற்போக்கானவர்கள் என்றாலும் கண்ணோட்டத்தில் பழமைவாதிகளாக இருந்தனர். [2] செர்வானியின் தாய் இளம் வயதிலேயே இறந்துவிட்டதால், அவரது தந்தை செர்வானி , அவரது மூத்த சகோதரி அஹ்மதி மற்றும் அவரது இளைய சகோதரர் அகமதுல்லா ஆகியோரின் கல்வியில் மிகுந்த ஆர்வம் காட்டினார். அப்போது செர்வானிக்கு நான்கு வயது ஆகும். அவரும் அவருடைய சகோதரியும் பாரசீக மொழி கற்றுக் கொண்டார்கள்.செர்வானி பாரசீக மொழியில் மட்டுமல்லாமல் உருது மொழியிலும் கவிதை எழுத கற்றுக்கொண்டார் மற்றும் அலிகரில் உள்ள தங்கள் வீட்டின் எல்லைகளைத் தாண்டி உலக வாழ்க்கை அறிவையும் பெற்றார். செர்வானிக்கு 10 வயதாக இருந்தபோது, அவர் தனது முதல் கவிதையினை வெளியிட்டார். [2]

செர்வானியின் தந்தை இவரும் இவரது உடன்பிறப்புகளும் உருது மொழியில் இஸ்லாமிய இறையியல் மற்றும் வெளிப்படுத்தும் உரைநடைகளைக் கற்றுக்கொண்டதை உறுதி செய்தார். இந்த நோக்கத்திற்காக, அவர் அலிகார் ஜூமா மசூதியின் இமாமின் குடும்பத்தைச் சேர்ந்த மற்றும் அஹ்ல்-ஐ-ஹதீஸ் இயக்கத்தில் பங்கேற்ற முஹம்மது யாகூப் இஸ்ரேலித்தேவை நியமித்தார். இந்த காலகட்டத்தில் அவரது தந்தை அலிகரில் பெண்கள் பள்ளியை நிறுவுவதில் மற்றும் அலிகார் கல்லூரியை முஸ்லிம் பல்கலைக்கழகமாக உயர்த்துவதில் தீவிரமாக இருந்தார். இந்த நேரத்தில் செர்வானி கவிதைகள் மற்றும் பிற கட்டுரைகளை எழுதி அவற்றை அலிகாரின் கதுன், டெல்லியின் இஸ்மத் மற்றும் லாகூரின் ஷெரீப் பீபி போன்ற பத்திரிகைகளில் வெளியிட்டார். செர்வானி குலத்தின் இளம் உறுப்பினர்களைக் கொண்ட இளம் செர்வானி ய சங்கத்தினை நிறுவுவதற்கும் அவர் பொறுப்பேற்றார், இது பிகாம்பூர் மற்றும் டாடோலி குழந்தைகளுக்கான பள்ளிகளை ஊக்குவித்தது மற்றும் அலிகார் பெண்கள் பள்ளிக்கு ஒரு உறைவிடத்தை உருவாக்கியது. [2]

தந்தையின் எச்சரிக்கையால் வருத்தமடைந்த அவர், சிறிது காலம் எழுதுவதை நிறுத்தினார். அவள் தன் தந்தையிடம் சொல்லாமல் கவிதை எழுதத் தொடங்கினார். இதற்கிடையில், அவளுடைய சகோதரர் அகமதுல்லா 1916 இல் இறந்தார்.1918 இல் இவர் வெளியிட்ட சிபாஸ் நாம-இ-உருது ( உருது பாராட்டு ) இது உயர் கல்விக்கான ஒரே நிறுவனமான ஹைதராபாத்தின் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் தொடக்க விழாவில் விவரிக்கப்பட்டது. உருது பயிற்று மொழியாக இருந்த இந்தியாவில்; அவர் தனது புனைப்பெயரில் கவிதையை வெளியிட்டார், அது ஒரு பெண்ணால் எழுதப்பட்டது என்பது மக்களுக்கு தெரியாது.

சான்றுகள்தொகு

  1. Parekh, Rauf (2015-04-13). "LITERARY NOTES: Urdu writers and poets who died young". DAWN.COM. 2021-03-04 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Minault, Gail. "Zay Khay Sheen, Aligarh's Purdah-Nashin Poet" (PDF). Columbia University. 9 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Contribution of Zay Khay Sheen highlighted". 19 February 2012. http://www.dawn.com/news/696701/contribution-of-zay-khay-sheen-highlighted. 
  4. "The First And Important Poetess Published In Urdu Literary Magazines Zay-Khay-Sheen Her Biographical Sketch And Research And Critical Appraisal". Pakistan Research Repository:Higher Education Commission Pakistan. 2005. 9 April 2016 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகீதா_கதூன்_செர்வானி&oldid=3366836" இருந்து மீள்விக்கப்பட்டது