முதன்மை பட்டியைத் திறக்கவும்

சகோதர உறவு என்பது, ஒருதாய் வயிற்றுப் பிறப்பாளர்களுள் ஒருவரை, ஒரே மூல மரபினை உடையவர்களுள் ஒருவரை, ஒரே தாய் தந்தை உடையவர்களுள் ஒருவரைக் குறிக்கும். சில சமயம் தத்து எடுக்கப்பட்ட குழந்தைகளும் சகோதர உறவில் இடம்பெறுவர். உடன் பிறந்தவர்கள் ஒன்றாகவே வளர்க்கப்படுவதால் அதிகமான நேரத்தை ஒன்றாகவே செலவிடுகின்றார்கள். எனவே, அன்பு செலுத்தவும், விளையாடுவதற்கும், தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஒருவரையொருவர் சார்ந்து வாழவும் கற்றுக் கொள்கின்றார்கள். குழந்தைப் பருவத்தில் பெற்றோர்களின் மனப்பான்மை காரணமாக பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டாலும், சமூக வளர்ச்சி, முதிர்ச்சி காரணமாகப் பின்னால் ஆரோக்கியமான உறவுகளை வளர்த்துக் கொள்கின்றார்கள்.

குழந்தைப்பருவ சகோதர - சகோதரி உறவில் செல்வாக்குள்ள சமூகக் காரணிகள்தொகு

  • பெற்றோர்களின் மனப்பான்மை
  • குழந்தைகளைப் பெற்றோர்கள் கையாளும் விதம்
  • பிறப்பு வரிசை
  • பால் வேறுபாடு
  • குடும்பத்திற்கு வெளியில் ஏற்படும் அனுபவங்கள்
  • சுற்றுப்புறத்தில் வசிப்பவர்கள்
  • ஆளுமைப் பண்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சகோதர_உறவுகள்&oldid=2661679" இருந்து மீள்விக்கப்பட்டது