சக்தன் தம்புரான்

இராம வர்மா குஞ்ஞி பிள்ளை தம்புரான் (Rama Varma Kunhjippilla Thampuran) (1751-1805), அல்லது ஒன்பதாம் இராம வர்மா என்றும் பிரபலமாக சக்தன் தம்புரான் என்றும் அழைக்கப்படும் இவர் கொச்சி இராச்சியத்தின் மன்னராக இருந்தார் இவரது அரண்மனை கொச்சின் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த திருச்சூரில் இருந்தது. பல பாரம்பரிய விழாக்கள் மற்றும் வரலாற்று கோயில்கள் காரணமாக திருச்சூர் நகரம் கேரளாவின் கலாச்சாரத் தலைநகரம் என்று குறிப்பிடப்படுகிறது. திருச்சூர் நகரத்தின் சிற்பியாக சக்தன் தம்புரான் கருதப்படுகிறார். திருச்சூர் பூரம் திருவிழா இவரால் தற்போதைய வடிவத்தில் புதுப்பித்ததாகக் கருதப்படுகிறது.

சக்தன் தம்புரான்
கொச்சி இராச்சியத்தின் மகாராசா
சக்தன் தம்புரான்
திருச்சூர் நகரத்தில் சக்தன் தம்புரான் நகரில் சக்தன் தம்புரானின் சிலை
கொச்சியின் மன்னன்
ஆட்சிக்காலம்16 ஆடத்து 1790 – 26 செப்டம்பர் 1805
முடிசூட்டுதல்1791
முன்னையவர்எட்டாம் இராமவர்மா
பின்னையவர்பத்தாம் இராமவர்மா
பிறப்பு26 சூலை 1751
வெள்ளரப்பள்ளி அரண்மனை, புத்தியேட்டம், காலடி
இறப்பு26 செப்டம்பர் 1805 (வயது 54)
திருச்சூர்
புதைத்த இடம்
துணைவர்சம்முக்குட்டி நேத்தியார் அம்மா
பெயர்கள்
இராம வர்மா குஞ்ஞி பிள்ளை தம்புரான்
மலையாளம்രാജാ രാമ വര്‍മ്മ
மரபுகொச்சி இராச்சியம்
தந்தைசென்னமங்கலம் மனையின் அனுஜன் நம்பூதிரிபாடு
தாய்அம்பிகா தம்புரான்
மதம்இந்து சமயம்

சுயசரிதை தொகு

ஆரம்ப ஆண்டுகள் தொகு

கி.பி 1751 ஆகத்து 26 ஆம் தேதி வெள்ளரப்பள்ளி அரண்மனையில் சென்னமங்கலம் மனையின் அனுஜன் நம்பூதிரிபாடு மற்றும் கொச்சின் அரச குடும்பத்தைச் சேர்ந்த அம்பிகா தம்புரான் ஆகியோருக்குப் பிறந்தார்.[1] இவருக்கு மூன்று வயதாக இருந்தபோது இவரது தாயார் இறந்தார். இளவரசனை இவரது தாயின் தங்கை வளர்த்தார். கல்லெங்கரா பிஷாரடி போன்ற அறிஞர்களின் பயிற்சியின் கீழ் அவரது ஆரம்பக் கல்வி நடந்தது. சக்தன் என்றால் சக்திவாய்ந்தவர் எனப்பொருள்படும். இவரது பெயரைப் போலவே இவர் மிகவும் சக்திவாய்ந்த மன்னாகவே கருதப்பட்டார். [2] [3]

திருமணம் தொகு

 
தம்புரான் தகனம் செய்யப்பட்ட சக்தன் தம்புரான் அரண்மனை நுழைவாயிலின் காட்சி

தம்புரான் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். திரிச்சூரின் புகழ்பெற்ற வடக்கே குருப்பாத் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நாயர் பெண்மணியை தனது 30 வயதில் முதல் திருமணம் செய்து கொண்டார். இந்த முதல் மனைவியுடன் அவருக்கு ஒரு மகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த நேத்தியார் அம்மா (கொச்சின் மன்னனின் மனைவியின் தலைப்பு) மகிழ்ச்சியற்ற திருமணத்திற்குப் பிறகு சீக்கிரமாகவே இறந்தார்.

அதன்பிறகு தம்புரான் சில தசாப்தங்களாக திருமணமாகாமல் இருந்தார். கரிம்பட்டா குடும்பத்தைச் சேர்ந்த 17 வயதான சம்முகுட்டி நேத்தியார் அம்மா என்பவரை தன்து 52 வயதில் மீண்டும் இரண்டாவ திருமணம் செய்து கொண்டார். இவர், பாரம்பரிய நடன வடிவமான கைகோட்டிகல்லியின் இசைக்கலைஞரும், நடனக் கலைஞருமாவார். திருமணமான 4 ஆண்டுகளுக்குப் பிறகு தம்புரான் இறந்தார். அந்த நேரத்தில், விதவை நேத்தியார் அம்மாவுக்கு அரசிடமிருந்து பண உதவி கிடைக்கவில்லை. எனவே அவர், தனது 21 வயதில், தனது மூதாதையர் வீட்டிற்கு திரும்பினார்.[2]

இறப்பு தொகு

 
கொச்சியின் மன்னர் இராமவர்மா சக்தி தம்புரானின் கல்லறை. அரண்மனைத் தோப்பு (வடக்கேரா அரண்மனை வளாகம்)

தனது 55 வது பிறந்தநாளுக்குப் பிறகு, சக்தன் தம்புரான் நோய்வாய்ப்பட்டு 1805 செப்டம்பர் 26 அன்று திரிச்சூர் நகரில் இறந்தார். இவர் திரிச்சூரின் சக்தன் தம்புரான் அரண்மனையில் அடக்கம் செய்யப்பட்டார். திருச்சூர் நகரில் உள்ள இவரது அரண்மனை ஒரு நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்படுகிறது. திருச்சூர் நகரத்தின் வளர்ச்சிக்கும், கேரளாவின் கலாச்சார தலைநகராகவும் மாற்றுவதற்கு இவர் பொறுப்பாளராக கருதப்படுகிறார். [2]

நிர்வாகம் தொகு

1762 ஆம் ஆண்டில், கொச்சி இராச்சியம் பத்து வட்டங்களாகவும் இரண்டு அரை வட்டங்களாகவும் ) உருவாயின. ஆனால் முந்தைய நிலப்பிரபுத்துவ தலைவர்கள் தங்கள் கோட்டையைத் தக்க வைத்துக் கொண்டனர். தம்புரான் கொச்சி இராச்சியத்தின் சிம்மாசனத்தில் ஏறிய பிறகு, நிலப்பிரபுத்துவ தலைவர்களிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தி தனது அதிகாரத்தை பலப்படுத்தினார். அந்த நேரத்தில், வடக்குநாதன் கோயில் மற்றும் பெருவனம் மகாதேவர் கோயில் ஆகியவை யோகியதிரிப்பாடுகள் எனப்படும் நம்பூதிரிச் சமூகத்தால் கட்டுப்படுத்தப்பட்டன. திருச்சூர் மாவட்டத்தின் பல்வேறு கோயில்களிலிருந்து யோகியதிரிப்பாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கோயில்களின் கட்டுப்பாட்டை தம்புரான் கைப்பற்றி அவர்களின் முறையை ஒழித்தார். இந்த கடுமையான அணுகுமுறையானது இவருக்கு சக்தன் என்ற பெயரைப் பெற்றுத்தந்தது. பிரிட்டிசு இராச்சியத்தின் போது, பிரிட்டிசு அதிகாரிகள் தம்புரானுடன் நல்ல உறவைக் கொண்டிருந்தனர். திருவிதாங்கூரைச் சேர்ந்த கார்த்திகைத் திருநாள் இராமவர்மனின் தனிப்பட்ட நண்பராகவும் இருந்தார்.

மரபு தொகு

திருச்சூர் நகரம் தொகு

 
சக்தன் தம்புரனால் கட்டப்பட்ட சுவராஜ் சுற்றுப்பாதையின் ஒரு பறவைப் பார்வை

நவீன நகரமான திருச்சூர் அதன் தோற்றத்தை சக்தன் தம்புரனுக்குக் கடன்பட்டிருக்கிறது. இவரது இரு மனைவிகளும் இங்கு பிறந்ததால் தான் இவர் அந்த ஊரை நேசித்ததற்குக் காரணம் என்று கருதப்படுகிறது. அவர்கள் திருச்சூரின் குருப்பாத் மற்றும் கரிம்பட்டா குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். தம்புரான் திருச்சூர் நகரை கண்டறிந்து தனது தலைநகரத்தை திருப்பூணித்துறையிலிருந்து திருச்சூருக்கு மாற்றினார். இவர் வடக்குநாதன் கோயிலைச் சுற்றியுள்ள 60 ஏக்கர் (24 ஹெக்டேர்) தேக்கு காடுகளை அகற்றி, இப்போது நகரின் மையத்தில் இருக்கும் தேக்கின்காடு மைதானத்தை உருவாக்கினார். காட்டைத் அழித்தப்பின், இப்போது சுவராஜ் சுற்றுப்பாதை என்று அழைக்கப்படும் வட்ட கான்கிரீட் சாலையைக் கட்டினார்.

திருச்சூர் பூரம் தொகு

 
திருச்சூர் பூரத்தின் போது வண்ணமயமான குடைகளுடன் யானைகளின் அணிவரிசை

திரிச்சூர் பூரம் அல்லது "அனைத்து பூரங்களின் தாய்" என்பது அறியப்பட்டபடி, சாக்தன் தம்புரானின் மனதில் உருவானதாகும். அந்த நேரத்தில், ஆறாட்டுப்புழா பூரம் கேரளாவின் மிகப்பெரிய கோயில் திருவிழாவாக இருந்தது. திருச்சூர் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள கோயில்களும் வழக்கமாக பங்கேற்றன. ஒருமுறை, அவர்கள் விழாவைத் தொடங்க தாமதம் ஏற்பட்டதால் ஆறாட்டுப்புழா பூரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தாமதமாக பங்கேற்ற கோவில்கள் அனைத்தும் கொச்சி மன்னாரான இவரிடம் வந்து இந்த பிரச்சினை குறித்து புகார் அளித்தன. தம்புரான் அனைத்து கோயில்களையும் தங்கள் தெய்வங்களை திரிசூருக்கு அழைத்து வந்து வடக்குநாதன் கோயிலின் தெய்வமான சிவனுடன் வழிபடுமாறு அழைத்தார். தம்புரான் பங்கேற்பாளர்களை மேற்கு மற்றும் கிழக்கு என இரண்டு குழுக்களாக வகைப்படுத்தினார். மேற்குக் குழுவில் திருவம்பாடி, கனிமங்கலம், இலாலூர், அய்யந்தோல், மற்றும் நெத்திலக்காவு கோயில்கள் இருந்தன. அதே சமயம் பரமக்காவு, கரமுக்கு, செம்புகாவு, சூரகொட்டுகாவு, பனமுக்காம்பில்லி கோயில்கள் கிழக்கு குழுவின் கீழ் வந்தன. [4]

சக்தன் தம்புரான் அரண்மனை தொகு

திருச்சூரில் 6 ஏக்கர் (2.4 ஹெக்டேர்) பரப்பளவில் அமைந்துள்ள சக்தன் தம்புரான் அரண்மனை என்பது (இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் நகரில் அமைந்துள்ள ஒரு அரண்மனையாகும். இது வடக்கேக்கிரா கோவிலகம் என்றும் அழைக்கப்படுகிறது. இது 1795 ஆம் ஆண்டில் புனரமைக்கப்பட்ட பிறகு கேரளா மற்றும் டச்சு கட்டடக்கலை பாணிகளின் கலவையாக திகழ்கிறது. இது தம்புரானின் வரலாற்று கலாச்சார மற்றும் கட்டடக்கலை சார்ந்த அரண்மனைகளில் ஒன்றாகும். [5] அதே போல் சக்தன் தம்புரான் அரண்மனை (கொச்சின் வம்சத்தின் சிறந்த ஆட்சியாளர்) தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகிறது. இந்த அரண்மனை 2005 ஆம் ஆண்டில் மாநிலத்தால் ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.[6] [7] [8]

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  • Aithihyamala by[Kottarathil Sankunni
  • Cochin State Manual

மேற்கோள்கள் தொகு

  1. "SAKTHAN THAMPURAN AND THE EMERGENCE OF COCHIN AS A COMMERCIAL CENTRE" (PDF). Saritha Viswanathan. Archived from the original (PDF) on 3 February 2015. பார்க்கப்பட்ட நாள் 2013-07-11.
  2. 2.0 2.1 2.2 "Kerala Celebrities". Kerala.com. பார்க்கப்பட்ட நாள் 2013-03-11.
  3. "HH Maharaja Rama Varma Shakthan Thampuran, Cochin". Geni. பார்க்கப்பட்ட நாள் 2013-03-11.
  4. "Thrissur Pooram - Prologue". Thrissurpooramfestival. Archived from the original on 2013-03-26. பார்க்கப்பட்ட நாள் 2013-04-02.
  5. "Sakthan Palace". thrissur.gov.in. Archived from the original on 2020-01-02. பார்க்கப்பட்ட நாள் 2018-10-23.
  6. "Shakthan Thampuran Palace". Kerala Tourism. Archived from the original on 2010-02-13. பார்க்கப்பட்ட நாள் 2010-09-20.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  7. "Page from the past" இம் மூலத்தில் இருந்து 2006-07-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060708155725/http://www.hindu.com/mag/2006/07/02/stories/2006070200360700.htm. 
  8. "Shakthan Thampuran Palace | Kerala Tourism". Kerala Tourism (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-29.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sakthan Thampuran
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தன்_தம்புரான்&oldid=3636645" இலிருந்து மீள்விக்கப்பட்டது