சக்தி கிருஷ்ணசாமி

த. க. கிருஷ்ணசாமி என்று அறியப்படும் தஞ்சாவூர் கலியபெருமாள் கிருஷ்ணசாமி (மார்ச் 11, 1913 - நவம்பர் 8, 1987) தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தினைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர், பாடலாசிரியர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் கலியபெருமாள்–வேதவள்ளி தம்பதியருக்கு மகனாக மார்ச் 11, 1913-ல் தஞ்சாவூரில் பிறந்தார். 1950களில் தொடங்கி 1970 வரை பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். தமிழ்த் திரையுலகின் சிறந்த திரைக்கதையாசிரியர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார்.[1][2]

சக்தி டி. கே. கிருஷ்ணசாமி
பிறப்புதஞ்சாவூர். கலியபெருமாள். கிருஷ்ணசாமி
(1913-03-11)11 மார்ச்சு 1913
தஞ்சாவூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு8 நவம்பர் 1987(1987-11-08) (அகவை 74)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைக்கதை, உரையாடல் ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1950s–1970s
பெற்றோர்தந்தை : கலியபெருமாள்
தாய் : வேதவள்ளி

வாழ்க்கை குறிப்பு

தொகு

கிருஷ்ணசாமி தனது எழுத்துப் பணியை நாடக ஆசிரியராகத் தொடங்கினார். சக்தி நாடக சபா என்ற நாடகக் கம்பனி ஒன்றை நடத்தி வந்தார். இதனால் “சக்தி” கிருஷ்ணசாமி என்று அழைக்கப்பட்டார். அதில் நடிகர்களாகப் பணிபுரிந்த சிவாஜி கணேசன், வி. கே. ராமசாமி, எம். என். நம்பியார் போன்ற நடிகர்கள் பிறகாலத்தில் திரைபடங்களிலும் வெற்றி பெற்றனர்.[1] 1957ல் கிருஷ்ணசாமி வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற நாடகத்தை எழுதினார். சிவாஜி கணேசன் கட்டபொம்மனாக நடித்த இந்த நாடகம் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து அதனைத் திரைப்படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டது. ம. பொ. சிவஞானத்தின் ஆய்வின் அடிப்படையில் கிருஷ்ணசாமியே அதற்கும் கதை வசனம் எழுதினார். அவரது அனல் பறக்கும் வசனங்கள் அப்படத்தின் வெற்றியில் பெரும் பங்கு வகித்தன.[3] படத்தின் கதை-வசனம் தனியே புத்தகமாகவும், ஒலி நாடாவாகவும் விற்பனையாகுமளவுக்கு மக்களிடையே வரவேற்பைப்பெற்றது.[4][5][6][7] அடுத்த இருபது ஆண்டுகளுக்கு பல வெற்றிப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதினார் கிருஷ்ணசாமி. இதைத் தவிர பலத் திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

திரைப்பட வசனங்கள்

தொகு

குறிப்பிடத்தக்க படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "என்.எஸ்.கே. நாடக சபாவில் நடந்த சிக்கல்!". Archived from the original on 2011-07-19. பார்க்கப்பட்ட நாள் 2014-06-19.
  2. "A doyen among actors". Archived from the original on 2010-08-19. பார்க்கப்பட்ட நாள் 2014-06-19.
  3. ” புராணக் கதைகளைத் திரைப்படமாக்கும் முறையினின்று மாற்றி, சமூகக் கதைகளைக் கொண்டு வந்த பெருமை சக்தி கிருஷ்ணசாமிக்கு உரியது. வீரபாண்டியக் கட்டபொம்மன் திரைப்படத்திற்கு வீரவசனம் எழுதிய பெருமை இவருக்கு உண்டு.” தமிழ் இணைய கல்விக்கழகப் பாடம்
  4. "கெய்ரோவில் ஆசிய ஆப்பிரிக்க பட விழா: சிறந்த நடிகராக சிவாஜிகணேசன் தேர்வு- "கட்டபொம்மன்" படத்துக்கு சிறப்பு பரிசு, MaalaiMalar, January 19, 2010". Archived from the original on ஜூலை 21, 2011. பார்க்கப்பட்ட நாள் ஜூன் 19, 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  5. "..appeared as a movie in 1959, a film which was a box-office hit. This film is still widely available — as script, video and cassette — and several Tamilians can quote extracts from its dialogue. In brief, today Kattabomman is a household name."Contributions to Indian sociology, Volume 30; p.1256
  6. The Indian Review, Vol 61. 1960
  7. India, A Reference Manual, 1961
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_கிருஷ்ணசாமி&oldid=3778495" இலிருந்து மீள்விக்கப்பட்டது