சங்கத்து, இந்தியா

பஞ்சாப் கிராமம்

சங்கத்து (Sangat) இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதிண்டா நகரத்தின் புறநகர் நகரமாகும். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதிண்டா மாவட்டத்தில் ஒரு நகராட்சி மன்றமாகவும் இது கருதப்படுகிறது. சங்கத்து மண்டி பதிண்டா மாவட்டத் தலைமையகத்திலிருந்து தெற்கில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது . சங்கத்து நகரம் ஒரு சிறிய வணிக மையமாகும்.

சங்கத்து
Sangat
நகரம்
சங்கத்து Sangat is located in பஞ்சாப்
சங்கத்து Sangat
சங்கத்து
Sangat
இந்தியாவின் பஞ்சாபில் அமைவிடம்
சங்கத்து Sangat is located in இந்தியா
சங்கத்து Sangat
சங்கத்து
Sangat
சங்கத்து
Sangat (இந்தியா)
ஆள்கூறுகள்: 30°05′36″N 74°50′42″E / 30.0932°N 74.8449°E / 30.0932; 74.8449
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்பட்டிண்டா மாவட்டம்
மக்கள்தொகை
 (2012)
 • மொத்தம்5,396
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்பஞ்சாபி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

மக்கள்தொகையியல்

தொகு

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சங்கத்து நகரத்தின் மக்கள் தொகை 5396. ஆகும்.[1] இதில் ஆண்கள் 53% மற்றும் பெண்கள் 47%. ஆவர். சங்கத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 52%, என கணக்கிடப்பட்டது. தேசிய சராசரியான 59.5% என்பதை விட இது குறைவாகும். ஆண்களின் கல்வியறிவு 57%, என்றும் பெண்களின் கல்வியறிவு 47%. என்றும் கல்வியறிவு சதவீதம் இருந்தது. சங்கத்தில், 13% மக்கள் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளாவர்.

சங்கத் மண்டியில் உள்ள பள்ளிகள்

தொகு

தூய நெஞ்ச கன்னி மடப் பள்ளி

கிளே இந்தியா பன்னாட்டு பள்ளி

ஞான சோதி பெண்கள் கல்லூரி

சிபாகி செய்லா சிங் வீர் சக்ரா அரசு மூத்த மேல்நிலைப் பள்ளி

மேற்கோள்கள்

தொகு
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கத்து,_இந்தியா&oldid=3833426" இலிருந்து மீள்விக்கப்பட்டது