சங்கராபுரம் வட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்டம்
(சங்கரபுரம் வட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சங்கராபுரம் வட்டம்.தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 7 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக சங்கராபுரம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 151 வருவாய் கிராமங்கள் உள்ளன.[1] இவ்வட்டததில் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 407,970 ஆகும். அதில் 206,075 ஆண்களும், 201,895 பெண்களும் உள்ளனர். 91,183 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 96.2% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 64.09% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 980 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 51338 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 939 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 109,862 மற்றும் 47,344 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 87% , இசுலாமியர்கள் 5.67%, கிறித்தவர்கள் மற்றும் பிறர் 0.23% ஆகவுள்ளனர்.[2]

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கராபுரம்_வட்டம்&oldid=3901390" இலிருந்து மீள்விக்கப்பட்டது