சங்கீதா ஐயர்

சங்கீதா ஐயர் (Sangita Iyer) ஒரு இந்திய-கனடிய ஒளிபரப்பு பத்திரிகையாளரும், எழுத்தாளரும், உயிரியலாளரும், ஆவணப்பட இயக்குநரும் ஆவார். [1] வனவிலங்கு பாதுகாப்பு, குறிப்பாக காட்டு யானைகள் மற்றும் மத நிறுவனங்களால் ஆசிய யானைகளுக்கு எதிரான ஏற்படும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தியதற்காக இவர் பிரபலமானார். மேலும், பிபிசி செய்திகளிலும் இடம்பெற்றுள்ளார். [2] ] இந்தியாவின் காட்டு மற்றும் சிறைபிடிக்கப்பட்ட யானைகளைப் பாதுகாக்கும் நோக்கில் 2016ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட " ஆசிய யானைகள் சங்கத்தின் குரல்" என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைவருமாவார். 

சங்கீதா ஐயர்
பிறப்புகேரளா, இந்தியா
தேசியம்இந்திய-கனடியர்
குடியுரிமைகனடியர்
பணிவனவிலங்கு பற்றிய ஆவணப்படம் எடுப்பவர், எழுத்தாளர், உயிரியலாளர், ஒளிபரப்பு பத்திரிகையாளர்
வலைத்தளம்
www.vfaes.org/more-about-sangita

இவரது முதல் ஆவணப்படம், காட்ஸ் இன் ஷேக்கிள்ஸ் கேரளாவில் சிறைபிடிக்கப்பட்ட யானைகளின் சிகிச்சையை அடிப்படையாகக் கொண்டது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் படம் பரிந்துரைக்கப்பட்டது. இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இடம்பெற்றது. மேலும், பன்னிரெண்டு சர்வதேச திரைப்பட விழா விருதுகளைப் பெற்றுள்ளது. [3] [4] ஐயர் சேகரித்த சந்திப்புகள் மற்றும் சாட்சிகளால் இந்த ஆவணப்படம் ஈர்க்கப்பட்டது. நேஷனல் ஜியாகிரபிக் தொலைக்காட்சியின் ஆய்வாளரான இவர் தேசிய புவியியல் கழகத்தின் கதை சொல்லும் விருதைப் பயன்படுத்தி ஆசிய யானைகளைப் பற்றிய 26-பகுதி குறுகிய ஆவணத் தொடரை உருவாக்கியுள்ளார். 

சுயசரிதைதொகு

சங்கீதா ஐயர் இந்தியாவின் கேரளாவில் பிறந்தார். பின்னர், கென்யாவில் பணிபுரிந்தார். அங்கு இவர் 1980களின் முற்பகுதியில் நைரோபி உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு உயிரியல் மற்றும் சூழலியல் கற்பித்தார். மேலும் பெர்முடாவில் செய்தி அறிவிப்பாளராகவும், அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம் /சிபிஎஸ் ஆகியவற்றின் இணை நிறுவனமான பெர்முடா ஒலிபரப்பு நிறுவனத்தின் இயற்கை மற்றும் வனவிலங்கு நிருபராகவும் பணியாற்றினார். இவர் தற்போது தொராண்டோவில் வசிக்கிறார். அங்கு இவர் ரோஜர்ஸ் தொலைக்காட்சி வலைஅய்மைப்பின் நிகழ்படக் கலைஞராகவும் நிகழ்ச்சி வழங்குபவராகவும் பணியாற்றியுள்ளார். 

தொழில்தொகு

ஐயர் 1999இல் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பத்திரிகையாளராக ஊடகவியல் துறையில் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். 2012இல் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் தகவல்தொடர்பு துறையில் முதுகலை பட்டம் பெற்றார். டிஸ்கவரி தொலைக்காட்சியின் அறிவியல் செய்தித் திட்டமான டெய்லி பிளானட் என்ற நிகழ்ச்சிக்காக இயற்கை மற்றும் வனவிலங்கு தொடர்பான அறிக்கைகளை இவர் தயாரித்தார். இவர் 2009இல் பெர்முடா சுற்றுச்சூழல் கூட்டணியை இணைந்து நிறுவினார். மேலும் 2016ஆம் ஆண்டில் ஆசிய யானைகளின் குரல் சங்கத்தை நிறுவினார்.

2013 ஆம் ஆண்டில், ஐயர் கேரளாவில் உள்ள யானைகளை மத நிறுவனங்களால் சுரண்டப்படுவதை ஆவணப்படுத்தத் தொடங்கினார். மேலும் கலாச்சார விழாக்களில் கோயில் யானைகள் எதிர்கொள்ளும் துன்பங்களை சித்தரிக்கும் காட்ஸ் இன் ஷேக்கல்ஸ் (2016) என்ற ஆவணப்படத்தை உருவாக்கினார். [5] திசம்பர் 2013இல் இந்தியாவுக்கான ஒரு பயணத்தின் போது யானைகள் எதிர்கொண்ட சித்திரவதைகளை நேரில் கண்ட பிறகு இவர் இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்தார். [6] இந்த ஆவணப்படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று சர்வதேச விருதுகளை வென்றது. கேரளாவில் சிறைபிடிக்கப்பட்ட யானைகளைப் பற்றி ஆவணப்படம் தயாரித்த முதல் பெண் இவர் ஆவார். 

விருதுதொகு

அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து இவர், 2016இல் நாரி சக்தி விருதினைப் பெற்றார். [7] [8] கூடுதலாக, ஐயர் ஏராளமான கல்வி விருதுகள் மற்றும் உதவித்தொகைகளையும் பெற்றுள்ளார்.

சர்ச்சைகள்தொகு

திருவனந்தபுரத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான யானை மறுவாழ்வு மையத்தில் "ஜென்டில் ஜயண்ட்ஸ் பயிற்சி மாநாடு" என்ற யானைகள் பராமரிப்புக்கான பயிற்சிப் பட்டறையை இவர் நடத்துவதைத் தடுக்க 2019 நவம்பரில், விஸ்வா கஜா சேவா சமிதி என்ற அமைப்பு கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. [9] தேசிய கொள்கைகளுக்கு மாறாக இவர் ஒரு வெளிநாட்டவர் என்றும், மூன்று நாள் பட்டறைக்கான பிரசுரங்களில் கேரள மாநில அரசின் அதிகாரப்பூர்வ சின்னத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும், ஐயர் தனது வெளிநாட்டு குடியுரிமை அட்டையை ஒப்படைத்து இந்தியக் குடிமக்களின் சலுகைகளைப் பெற்ரார். [10] [11] [12] . மேலும், கேரள வனத்துறை இவருக்கு அதன் சின்னத்தை பயன்படுத்த அனுமதித்தது மட்டுமல்லாமல் மாநாட்டையும் இணைந்து நடத்தியது.

காட்ஸ் இன் ஷேக்கிள்ஸ் வெளியானதிலிருந்து தான் சைபர் தாக்குதலுக்கு ஆளானதாக குறிப்பிட்டார். [13]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீதா_ஐயர்&oldid=3122011" இருந்து மீள்விக்கப்பட்டது