சங்கீதா பட்டேல்

சங்கீதா படேல் (Sangita Patel) [1] (பிறப்பு 1979 சனவரி 2) கனடாவைச் சேர்ந்த தொலைக்காட்சி ஆளுமையாவார். தற்போது எச்ஜி தொலைக்காட்சியின் ஹோம் டு வின் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும், என்டர்டெயின்மென்ட் டுநைட் கனடா என்ற நிகழ்ச்சியின் ஒளிபரப்பு ஆளுமையாகவும் உள்ளார்.

சங்கீதா பட்டேல்
சங்கீதா பட்டேல்
பிறப்புசனவரி 2, 1979 (1979-01-02) (அகவை 45)
தொராண்டோ, ஒன்றாரியோ
வாழ்க்கைத்
துணை
சமீர் பட்டேல்

சொந்த வாழ்க்கையும் தொழிலும்

தொகு

சங்கீதா 2002இல் மின் பொறியியலில் பட்டப்படிப்பை முடித்து, பொறியாளராக சில ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, பல்வேறு ஊடகங்களில் தன்னார்வ நிலைகளில் பணி புரிந்து, இறுதியில் தி வெதர் நெட்வொர்க் என்ற வானிலைத் தகவல்களை வழங்கும் தொலைக்காட்சியில் வானிலை செய்தி வழங்குநரானார்.

தொலைக்காட்சியில்

தொகு

சிபி24 என்ற வார இறுதி வானிலை நிகழ்ச்சித்தொகுப்பாளராக ஒரு பணியை ஏற்றுக்கொண்டபின் இவரது மாற்றம் தொடர்ந்தது. சிட்டிநியூஸில் இன் தி சிட்டி என்று அழைக்கப்படும் தனது சொந்த பிரிவுக்கான செய்திகளை வழங்கத் தொடங்கியபோது இவர் பொழுதுபோக்கு மற்றும் வாழ்க்கை முறைகளுக்கான நிகழ்ச்சிகளை வழங்க ஆரம்பித்தார். பின்னர் வானிலை மற்றும் லைவ் ஐ பிரிவுகளுக்கான பிரேக்பாஸ்ட் டெலிவிஷன் என்ற வழக்கமான நிழச்சிக்கு மாறினார்.

என்டர்டெயின்மென்ட் டுநைட் கனடா நிகழ்ச்சியின் தொகுப்பாளரான செரில் ஹிக்கியின் மகப்பேறு விடுப்பின் போது இவர் இணை தொகுப்பாளராக சேர்ந்தார்.

2015 ஆம் ஆண்டில் ஷாப்பர்ஸ் ட்ரக் மார்ட்டுடன் என்டர்டெயின்மென்ட் டுநைட் கனடாவின் அழகு பிரச்சாரத்திலும் இவர் இடம்பெற்றார். திசம்பர் 2015 இல் புட் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்பட்ட பிரசிடென்ட்ஸ் சாய்ஸ் இன்சைடர்ஸ் கலக்சன்னுக்கான விடுமுறை கால பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இவர் இருந்தார். எல்'ஓரியல் அவர்களின் டிஜிட்டல் விளம்பரத்தில் அசாதாரண எண்ணெய்கள் முடி வரிசையை அறிமுகப்படுத்தியதிலும் இவர் இடம்பெற்றார்.

தற்போது

தொகு

இவர் தனது கணவர் சமீர் பட்டேல், அவா மற்றும் ஷைலா என்ற தனது இரண்டு மகள்களுடன் தொராண்டோவில் வசிக்கிறார். 2014 ஆம் ஆண்டில், ஹலோ மாகஸீன் என்ற இதழில் கனடாவின் மிக அழகானவர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஐம்பது பேர்களில் இவரும் ஒருவராக இருந்தார். [2]

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கீதா_பட்டேல்&oldid=3242660" இலிருந்து மீள்விக்கப்பட்டது