எஸ். பி. வெங்கடேஷ்
எஸ். பி. வெங்கடேஷ் (S. P. Venkatesh), சங்கீதராஜன் (Sangeetharajan) என்றும் அழைக்கப்படுகிறார், பிறப்பு 5 மார்ச் 1955) என்பவர் ஒரு இந்திய இசையமைப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக மலையாளப் படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் 80 மற்றும் 90 களின் பிற்பகுதியில் மலையாள திரைப்படத் துறையின் பாடல்களுக்காக பிரபலமானவர்.
எஸ். பி. வெங்கடேஷ் | |
---|---|
பிற பெயர்கள் | சங்கீதராஜன் தமிழ் |
பிறப்பு | மார்ச்சு 5, 1955 |
இசை வடிவங்கள் | பின்னணி இசை |
தொழில்(கள்) | திரைப்பட இசையமைப்பாளர், இசைக்கருவி வாசிப்பவர் |
இசைக்கருவி(கள்) | கிடார்வாசிப்பாளர், பாடகர், வயலின்வாசிப்பாளர் |
தொழில்
தொகுவெங்கடேசின் தந்தை பழனி ஒரு திறமையான மாண்டோலின் இசைக் கலைஞர். வாழ்க்கையின் ஆரம்பத்தில், எஸ். பி. வெங்கடேஷ் கிட்டார், பாஞ்சோ, மாண்டோலின் போன்றவற்றை வாசித்தார், மேலும் துவக்கக் காலத்தில் சியாம் மற்றும் ரவீந்திரன் ஆகியோரிடம் உதவி இசை அமைப்பாளராக இருந்தார். டென்னிஸ் ஜோசப் மலையாள திரைப்படத் துறையில் இவரை அறிமுகப்படுத்தினார். தம்பி கண்ணந்தனம் இயக்கிய ராஜவிண்டே மகன் படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன. இந்த படமும், படத்தின் பாடல்களும் பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் விளைவாக 1990 களில் இவரது தொடர்ச்சியான வெற்றி படப் பாடல்கள் வெளியாயின. இவரது மிகவும் பிரபலமான திரைப்பட பாடல்கள் இடம்பெற்ற பாடங்களாக இந்திரஜாலம், கிலுக்கம், மின்னாரம், ஸ்பாடிகம், துருவம், கௌரவர், ஜானி வாக்கர், கிழக்கன் பாத்ரோஸ், ஹிட்லர் ஆகியவை உள்ளன.
1993 ஆம் ஆண்டில், பைத்ருகாம் மற்றும் ஜனம் ஆகிய படங்களுக்கு இசை அமைத்ததற்காக சிறந்த இசை இயக்குனருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்றார்.
1999 ஆம் ஆண்டில், பாபு கணேஷ் மற்றும் விசித்ரா நடித்த வெளிவராத தமிழ் திரைப்படமான இது முடிவதில்லை படத்திற்க்காகஒரே நாளில் ஒன்பது பாடல்களைப் பதிவு செய்தார். [1]
திரைப்படவியல்
தொகுதமிழ் படங்கள்
தொகு- திருப்பூர் (2010) (பின்னணி இசை மட்டும்)
- உனக்காக என் காதல் (2010) (பின்னணி இசை மட்டும்)
- மண்டபம் (2010) (பின்னணி இசை மட்டும்)
- பிஞ்சு மனசு (2009) (பின்னணி இசை மட்டும்)
- காசிமேடு கோவிந்தன் (2008) (பின்னணி இசை மட்டும்)
- முனி (2007) (பின்னணி இசை மட்டும்)
- இருவர் மட்டும் (2006) (பின்னணி இசை மட்டும்)
- ரிமோட் (2004)
- பீஷ்மர் (2003)
- வடக்கு வாசல் (2003)
- அம்மையப்பா (2002)
- கேம் (2002)
- நீ எந்தன் வானம் (2000)
- அடுத்தக் கட்டம் (1999)
- மறு விசரணை (1995)
- இதுதாண்டா சட்டம் (1992)
- தீச்சட்டி கோவிந்தன் (1991)
- விக்னேஷ்வர் (1991)
- நண்பர்கள் (1991)
- சேலம் விஷ்ணு (1990)
- 13-ம் நம்பர் வீடு (1990)
- பாட்டாளி மகன் (1990)
- என் கணவர் (1989)
- காவல் பூனைகள் (1989)
- பூவுக்குள் பூகம்பம் (1988)