சசி செல்லையா
சசிகுமார் செல்லையா (Sashikumar Cheliah) (பிறப்பு 10 சூன் 1979) சிங்கப்பூரில் பிறந்த ஆத்திரேலிய சமையல்காரர் ஆவார். 2018 ஆம் ஆண்டில் மாஸ்டர்செஃப் ஆத்திரேலியாவின் பத்தாவது தொடரில் போட்டியாளராக இருந்த இவர், இறுதியில் நிகழ்ச்சியை வென்றார்.
சசி செல்லையா | |
---|---|
பிறப்பு | சசிகுமார் செல்லையா 10 சூன் 1979 சிங்கப்பூர் |
தேசியம் | ஆத்திரேலியர் |
கல்வி | சுவிஸ் காட்டேஜ் மேல்நிலைப் பள்ளி |
படித்த கல்வி நிறுவனங்கள் | இயிசூனின் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கல்லூரி |
பணி | தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சி |
பாணி | சிங்கப்பூர் உணவு, இந்திய உணவுமுறை, மலேசிய உணவுகள் |
வாழ்க்கைத் துணை | இரபிக்கா விஜயன் (1997) |
பிள்ளைகள் | 2 |
விருதுகள் | மாஸ்டர்செப் ஆத்திரேலியா தொடர் 10இன் வெற்றியாளர் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுசெல்லையா சிங்கப்பூரில் வளர்ந்தார். அங்கு சுவிஸ் காட்டேஜ் மேல்நிலைப் பள்ளியிலும், இயிசூனின் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் கல்லூரியில் பயின்றார் . இவர் தனது பெற்றோருக்கு ஏழு குழந்தைகளில் மூத்தவர்.[1] தனது பன்னிரண்டு வயதில் சிங்கப்பூர் காவல் படையின் சிறப்பு தந்திரோபாயங்கள் மற்றும் மீட்புப் பிரிவில் பணியாற்றினார். அங்கு இவர் தந்திரோபாயங்கள், மீட்பு நடவடிக்கைகள், பயங்கரவாதத்தை எதிர்ப்பது, கடத்தல் மற்றும் கலகப் பிரிவு காவல்துறையில் உயர் பாதுகாப்பு ஆகியவற்றில் பயிற்சி பெற்றார்.[2]
ஒரு செவிலியரான இரபிக்கா என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.[3] குடும்பம் 2012 இல் அடிலெயிடுக்குக் குடிபெயர்ந்தது.[4]
அங்கே, ஒர் உணவு விடுதியின் உரிமையாளரான இவரது தாயாரும், அத்தைகளும், குடும்ப உணவைத் தயாரிப்பதை கண்டபின் இவருக்கும் உணவுக்கான இவரது ஆர்வம் தொடங்கியது.[4] இந்திய மற்றும் தெற்காசிய சுவைகளைக் கொண்ட ஒரு இணைவு உணவகத்தைத் திறப்பதே இவரது குறிக்கோள்.[5]
மாஸ்டர்செஃப் ஆத்திரேலியா
தொகு2018 இல் மாஸ்டர்செஃப் ஆத்திரேலியா என்ற நிகழ்ச்சியில் போட்டியிட முதல் 24 இடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சூலை 31 அன்று இவர் இறுதிப் போட்டியை எட்டினார். 100 இல் 93 புள்ளிகளுடன் சாதனை படைத்தார்.[4][6]
மாஸ்டர்செஃப்பிற்குப் பிறகு
தொகுமெல்பேர்ணின் ஒரு பகுதியில் காஜா பை சசி என்ற பாப்-அப் உணவகத்தை இவர், தொடங்கி சிங்கப்பூர் உணவுகளை வழங்க ஆரம்பித்தார்.[7] நவம்பர் 2019 இல், அடிலெய்டில் உணவகமான காஜாவைத் திறந்தார்.[8] 2020 ஆம் ஆண்டில், இவரது மகன் இரியான் இளையோருக்கான மாஸ்டர்செஃப் ஆத்திரேலியாவில் (தொடர் 3) பங்கேற்றார். ஆனால் அக்டோபர் 13 அன்று வெளியேற்றப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sashi Cheliah". tenplay. பார்க்கப்பட்ட நாள் 2 August 2018.
- ↑ "9 Sashi Cheliah Facts As Singapore Celebrates His MasterChef Australia Victory". mustsharenews.com. பார்க்கப்பட்ட நாள் 2 August 2018.
- ↑ "Singapore-born Sashi Cheliah crowned MasterChef Australia champion". https://www.straitstimes.com/asia/australianz/singapore-born-sashi-cheliah-crowned-masterchef-australia-champion. பார்த்த நாள்: 6 September 2018.
- ↑ 4.0 4.1 4.2 "Singapore-Born Home Cooks Wins MasterChef Australia S10 - Star2.com". star2.com. 1 August 2018. Archived from the original on 6 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 6 September 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Sashi Cheliah is winning hearts with his smile while cooking at MasterChef - The Indian Down Under". www.indiandownunder.com.au. Archived from the original on 6 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 6 September 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Highest score ever: Sashi Cheliah crowned 2018 MasterChef winner". Sydney Morning Herald. https://www.smh.com.au/entertainment/tv-and-radio/highest-score-ever-sashi-cheliah-crowned-2018-masterchef-winner-20180731-p4zun7.html. பார்த்த நாள்: 6 September 2018.
- ↑ "MasterChef winner Sashi Cheliah is opening a pop-up restaurant". timeout.com. பார்க்கப்பட்ட நாள் 4 October 2018.
- ↑ "Gaja by Sashi set to open on Pirie Street". CityMag. 29 October 2019.