சட்டம் என் கையில்
டி. என். பாலு இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சட்டம் என் கையில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
சட்டம் என் கையில் | |
---|---|
திரைப்பட விளம்பர சுவரொட்டி | |
இயக்கம் | டி. என். பாலு |
தயாரிப்பு | டி. என். பாலு (பாலு சினி ஆர்ட்ஸ்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமல்ஹாசன் ஸ்ரீபிரியா சுருளி ராஜன் சத்யராஜ் |
ஒளிப்பதிவு | என். கே. விசுவநாதன் |
படத்தொகுப்பு | வி. ராஜகோபால் |
வெளியீடு | சூலை 14, 1978 |
நீளம் | 3998 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சத்யராஜ் நடித்த முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்தை இந்தி மொழியில் 1982 இல் இயக்குநர் டி. ராமராவ் ஏ தோ கமால் ஹோகயா (yeh To Kamaal Ho Gaya) எனும் பெயரில் கமல்ஹாசன், பூனம் தில்லான் ஆகியோரை வைத்து மீண்டும் படமாக்கினார்.
நடிகர்கள்
தொகு- கமல்ஹாசன் - பாபு / இரத்தினம்
- ஸ்ரீபிரியா - பிரியா
- ஸ்ரீகாந்த் - செந்தில்
- எஸ். ஏ. அசோகன் - மாயாண்டி
- தேங்காய் சீனிவாசன் - நாகராஜன்
- சுருளி ராஜன் - (ரத்தினத்தின் நண்பர்)
- வி. கோபாலகிருஷ்ணன் - (பிரியாவின் தந்தை)
- புஷ்பலதா - லஷ்மி
- காந்திமதி - சிவகொழுந்து
- சத்யராஜ் - டிக்கி
- எலிசபெத் - கேத்ரின்
- லூசு மோகன்
- உசிலைமணி
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகளை எழுதியிருந்தார்.
எண். | பாடல் | பாடகர்(கள்) | நீளம் (நி:வி) |
---|---|---|---|
1 | "ஆழக் கடலில்" | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | 4:08 |
2 | "சொர்க்கம் மதுவிலே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:34 |
3 | "ஒரே இடம்" | பி. சுசீலா | 4:40 |
4 | "கடை தேங்காயோ" | மலேசியா வாசுதேவன் | 4:35 |
5 | "மேரா நாம் அப்துல்லா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:10 |