சட்பறி பெரும்பாகம்

சட்பறி பெரும்பாகம் (2001-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கீட்டின் படி 160, 274 பேர்)[1] கனடாவின், ஒண்டாரியோ மாகாணத்தில் அமைந்திருக்கும் ஒரு நகராட்சி ஆகும். கனடா பசிபிக் ரயில்தடத்தில் பணியாற்றிய கொல்லனான டாம் பிளநாகன் என்பவரால் இப் பகுதியில் நிக்கல் கனிம வளம் கண்டறியப்பட்ட பின் தோற்றம்பெற்ற ஒரு நகரமாகும். கடந்த 2001-ஆம் ஆண்டு சட்பறி வட்டார நகராட்சிப் பகுதியில் அமைந்திருந்த பல சிறிய நகரங்களையும், ஊரகப் பகுதிகளையும் ஒன்றிணைத்து சட்பறி பெரும்பாகம் உருவாக்கப்பட்டது. தற்சமயம் வட ஒண்டாரியோவில் அமைந்திருக்கும் மக்கள் தொகையின் அடிப்படையில் மிகப் பெரிய நகரமாக இது விளங்குகின்றது. ஒட்டுமொத்த கனடாவில் 24-ஆவது பெரிய நகரமாகவும் இது திகழ்கின்றது. நிலப்பரப்பின் அடிப்படையில் நோக்கினால் ஒண்டாரியோவின் மிகப் பெரிய நகரமாகவும், ஒட்டு மொத்த கனடாவில் ஏழாவது பெரிய நகராட்சிப் பகுதியாகவும் இது இருக்கின்றது. சட்பறி நகரம் தனியான ஓர் ஆட்சிப் பகுதியாகவும் விளங்குகின்றது. எந்தவொரு தனித்துவமான மாவட்டம், ஒன்றியம், மண்டலத்தோடும் இது இணைக்கப்படவில்லை என்பது இதன் தனிச் சிறப்பு.

ராம்சே ஏரிக்கரையின் தோற்றம்

குறிப்புகள் தொகு

  1. "Statistics Canada Census Profile". Statistics Canada. 2013-03-01. பார்க்கப்பட்ட நாள் 23 April 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்பறி_பெரும்பாகம்&oldid=2193135" இலிருந்து மீள்விக்கப்பட்டது