சதர் அலி கான்

சப்தர் அலி கான் என்பவா் தோஸ்து அலி கானின் மகன் ஆவார். 1740 ஆம் ஆண்டில் ஆம்பூரில் போர்க்களத்தில் அவரது தந்தையின் இறப்புக்குப் பிறகு அவர் வேலுருக்கு தப்பிச் சென்றார். அதே ஆண்டில், மராட்டியர்களால் ஆற்காடு நவாபாக அவர் அமர்த்தப்பட்டார். [1]

இவர் காலகட்டத்தில் நாட்டில் பாதுகாப்பற்ற குழப்ப நிலை இருந்தது. சப்தா் அலி கான் தன்னுடைய நாட்டையும் தன் குடும்பத்தையும் காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்தார். தன் மகனின் மனைவியின் பாதுகாப்புக்காக அவரை பிரித்தானியிரின் வசம் இருந்த சென்னைக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் ஆங்கிலேயர்களால் சென்னையில் இப்போது ஜார்ஜ் டவுன் என்றும் அக்காலத்தில் கருப்பர் நகரம் என்ற பொருளில் அழைக்கப்பட்ட பிளாக் டவுனில்  பாதுகாப்பாக தங்கியிருந்தனர்.

ஆனால் துரதிருஷ்டவசமாக 1742 ஆம் ஆண்டில் அவரது மைத்துனான முருசா அலியால் அவரைக் கொன்றுவிட்டு தன்னை ஆற்காடு நவாப்பாக அறிவித்துக் கொண்டார்.[1]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதர்_அலி_கான்&oldid=2629329" இருந்து மீள்விக்கப்பட்டது