சதுர நிலையாக்கி

சதுர நிலையாக்கி - மின்னணுவியலில் பல வகை அலையாக்கிகள் உள்ளன. அலையாக்கிகள் பல்வேறு அலைகளை உண்டாக்கப் பயன்படும். முக்கோண, சதுர மற்றும் சைன் அலைகளை, இவ்வலை இயற்றிகள் உண்டாக்கும்.

  • மின்னணுவியல் சுற்றுகளைச் சாேதனை செய்யவும் ஒலி பெருக்கி, மிகைப்பி போன்றவற்றின் அலை உணர் தன்மைகளைக் கண்டறியவும் இவை மிகவும் பயன்படும்.[1]
  • பாெதுவாக அலைவெண்ணை மாற்றும் முறையிலும், அலையின் மின்னழுத்த உயரத்தை மாற்றும் வகையிலும், அலை இயற்றிகள் அமைந்திருக்கும். அலையாக்கிகள் சிறந்த பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
  • அலை சுழியிலிருந்து குறிப்பிட்ட உயரத்திற்கு உயரும். வேகம் அதிகமாக இருக்க வேண்டும். இலக்க சுற்றுகளை சாேதனை செய்ய மேற்கூறிய பண்புகள் மிகவும் முக்கியமானவை.
  • கணிப்பொறிகளிலும் இலக்க தாெடர்பியல்களிலும் இலக்கச்சுற்றுகள் மிகவும் பயன்படுவதால் சதுர அலையாக்கிகள் ஆய்வுச்சாலைகளில் மிகவும் தேவைப்படும்.

மேற்கோள்கள்தொகு

  1. பேரா.கே.கே.அருணாச்சலம் (2007). "சதுர நிலையாக்கி". அறிவியல் களஞ்சியம் தொகுதி-9 (2) 9. தஞ்சாவூர்: தமிழ் பல்கலைக்கழக வெளியீடு. 726. அணுகப்பட்டது 5 சூலை 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுர_நிலையாக்கி&oldid=3603248" இருந்து மீள்விக்கப்பட்டது