சதை ஆற்றல் நுட்பச் சிகிச்சை

சதை ஆற்றல் நுட்பச் சிகிச்சை (ஆங்கிலம்:Muscle Energy Technique (MET)) என்பது கைநுட்பச் சிகிச்சையின் ஒரு முக்கியமான சிகிச்சை முறை ஆகும். இம்முறை மூட்டு அசைவு சரி செய்யவும், தசை பிடிப்பு, தசை பலகீனம் மற்றும் இவைகளால் ஏற்படும் வலிகளை சரி செய்யவும் பெரும்பாலும் இயன்முறைமருத்துவர், உடற்பிடிப்பு நிபுணர், மற்றும் தசை எலும்பு மருத்துவ துறை சார்ந்த மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் தசை எலும்பு சார்ந்த உடல் செயற்பாடுகள் சீராக்கப்படுகிறது.[1] இந்த சிகிச்சை முறையில் நோயாளிகள் தம் சொந்த தசை சுருக்க செயல்பாட்டை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.[2]

வரலாறு தொகு

வரலாற்று ரீதியாக, இதன் நுட்பம் எலும்பு துறை இயக்கவியலில் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தலில் இருந்து வருகிறது. நோயாளி தம் சொந்த தசை இயக்கம் அல்லது செயற்பாட்டு மற்றும் மருத்துவ நிபுணரின் அதற்கு எதிராக, சீராக வரையறைக்குட்பட்ட விசைகளை நோயாளியின் தசையில் ஏற்படுத்தி குறைபாடுகளை சரி செய்யும் முறை ஆகும். இந்த சிகிச்சை முறை முதன்முதலில் 1948 ஆம் ஆண்டு மருத்துவர் பிரீடு மிட்செல் அவர்களால் வரையறுக்கப்பட்டது.[3] தசை ஆற்றல் நுட்ப சிகிச்சை உடல் குறைபாடுகள் குறிப்பாக மூட்டு அசைவு குறைபாடு, தசை இருக்கம், தசை பகுதி பெருக்கம் மற்றும் இவைகளால் ஏற்படும் வலிகளுக்கு தகுந்த சிகிச்சையாக பயன்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Chaitow, Leon (2013). Muscle Energy Techniques + Videos. Elsevier Science Health Science Division, 2013. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0702046537. https://books.google.com/books?id=Ub0nmQEACAAJ. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. Savarese, Robert G. (2003). OMT Review 3rd Edition. பக். 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0967009014. 
  3. "Glossary of Osteopathic Terminology" (PDF). American Association of Colleges of Osteopathic Medicine. April 2009. p. 28. Archived from the original (PDF) on 2 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 25 August 2012.