சத்யம் (2008 திரைப்படம்)

தமிழ் திரைப்படம்

சத்யம் 2008 ஆம் ஆண்டு விஷால் மற்றும் நயன்தாரா நடிப்பில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், அறிமுக இயக்குனர் ஏ. ராஜசேகர் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானத் திரைப்படம். விஷால் முதன் முதலில் காவல்துறை அதிகாரியாக நடித்த திரைப்படம். 2008 ஆகத்து 15 சுதந்திர நாளில் இப்படம் வெளியானது[2]. விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணா இப்படத்தைத் தயாரித்தார். இப்படம் 27 கோடி பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது.[3]

சத்யம்
இயக்கம்ஏ. ஆர். ராஜசேகர்
தயாரிப்புவிக்ரம் கிருஷ்ணா
கதைஏ. ஆர். ராஜசேகர்
இசைஹாரிஸ் ஜயராஜ்
நடிப்புவிஷால்
நயன்தாரா
கோட்டா சீனிவாச ராவ்
ஒளிப்பதிவுஆர். டி. ராஜசேகர்
படத்தொகுப்புஆண்டோனி
கலையகம்ஜி. கே. பிலிம் கார்ப்பரேசன்
விநியோகம்ஜி.கே. பிலிம் கார்ப்பரேசன்
வெளியீடுஆகத்து 15, 2008 (2008-08-15)
ஓட்டம்178 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தெலுங்கு
ஆக்கச்செலவு27 கோடி[1]

கதைச்சுருக்கம்தொகு

"குற்றங்களைத் தடுப்பதுதான் காவல்துறையின் கடமை. குற்றவாளிகளைக் கொல்வதல்ல!" என்ற வசனத்தோடு அறிமுகமாகும் நேர்மையான காவல்துறை அதிகாரி சத்யம் (விஷால்). மூன்று அமைச்சர்கள் கொலைசெய்யப்பட்ட வழக்கைப் புலனாய்வு செய்யும் சத்யம், அந்த கொலைகளைச் செய்தது குற்றவாளி மாணிக்கவேல் (உபேந்திரா) என்று அறிந்ததும் அதிர்ச்சியடைகிறார். காரணம் குற்றவாளி மாணிக்கவேல் முன்னாள் காவல்துறை அதிகாரி மட்டுமல்ல, சத்யம் காவல்துறையில் சேர்வதற்குத் தூண்டுதலாக இருந்தவர்.

காவல்துறையில் நேர்மையாகக் கடமையை செய்யமுடியாததால் தான் வேலையைவிட்டு வெளியேறி தவறு செய்தவர்களைத் தானே தண்டித்ததாகக் கூறுகிறார் மாணிக்கவேல். அதை மறுக்கும் சத்யம் சட்டப்படி குற்றவாளிகளுக்குத் தான் தண்டனை பெற்றுத்தருவதாக சவால் விடுகிறான்.

தொலைக்காட்சி நிருபரான தெய்வநாயகியும் (நயன்தாரா) சத்யமும் காதலிக்கின்றனர்.

முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படும் உள்துறை அமைச்சர் கொண்டல் தாசனின் (கோட்டா சீனிவாச ராவ்) குற்றங்களை சட்டப்படி நிரூபிக்க முயற்சி செய்யும் சத்யம் பல இன்னல்களுக்கு ஆளாகிறான். அவனது தாய் கொல்லப்படுகிறாள். அமைச்சரின் சதியால் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான் சத்யம். தன்னை நிரபராதி என்று நிரூபித்து விடுதலை பெற்றானா? மாணிக்கவேலிடம் சவால் விட்டதுபோல் சட்டப்படி அமைச்சரின் குற்றத்தை நிரூபித்தானா? என்பது முடிவு.

நடிகர்கள்தொகு

இசைதொகு

படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.[4][5] இப்படம் அவரது 25 வது படமாகும்.[6] பாடலாசிரியர்கள் பா. விஜய், யுகபாரதி மற்றும் கபிலன்.

பாடல் வரிசை
வ. எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்கள் காலநீளம்
1 ஆறடி காத்தே பா. விஜய் ஹரிஹரன் 4:46
2 அட கட கட பா. விஜய் பிரேம்ஜி அமரன் 5:02
3 செல்லமே செல்லமே யுகபாரதி பல்ராம், பாம்பே ஜெயஸ்ரீ, சுனிதா சாரதி 6:04
4 என் அன்பே[7] யுகபாரதி சாதனா சர்கம், பென்னி தயாள் 6:07
5 பால் பப்பாளி கபிலன் ரஞ்சித், நவீன், சங்கீதா ராஜேஸ்வரன் 5:49

மேற்கோள்கள்தொகு

  1. Sathyam budget was 27 crore
  2. "படவெளியீடு".
  3. "பட்ஜெட் 27 கோடி".
  4. "இசை".
  5. "இசை".
  6. "ஹாரிஸ் ஜெயராஜ் - 25 வது படம்".
  7. "என் அன்பே - பாடல் வரிகள்".


"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்யம்_(2008_திரைப்படம்)&oldid=2975352" இருந்து மீள்விக்கப்பட்டது