சந்திரமுகி (திரைப்படம்)

பி. வாசுஇயக்கத்தில் 2010 இல் வெளியான திரைப்படம்

சந்திரமுகி 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்மொழித் திரைப்படமாகும். பி. வாசு இதன் இயக்குனர் ஆவார். இப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேல் மற்றும் பிரபு நடித்துள்ளனர். வித்தியாசாகர் இப்படத்தின் இசையமைப்பாளர் ஆவார். தோட்டாதரணி இதன் கலைஇயக்குனர் ஆவார். இத்திரைப்படத்தில் வரும் சந்திரமுகியின் அழகான ஓவியம் ராஜா என்ற இளைஞனால் வரையப் பெற்றது. இப்படம் 1999-ல் வெளியான படையப்பா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. [சான்று தேவை]

சந்திரமுகி சந்திரமுகி.jpg
இயக்கம்பி. வாசு
தயாரிப்புசிவாஜி புரொடக் ஷன்
இசைவித்தியாசாகர்
நடிப்புரஜினிகாந்த்
பிரபு
வடிவேலு
நயன்தாரா
ஜோதிகா
வெளியீடுஏப்ரல் 14, 2005
ஓட்டம்166 நிமிடங்கள்
மொழிதமிழ்
ஆக்கச்செலவுgross = 64 கோடி

வகைதொகு

பேய்ப்படம் / மசாலாப்படம்

நடிகர்கள்தொகு

இயக்குநர் பி. வாசு, தயாரிப்பாளர் ராம்குமார் கணேசன் மற்றும் ராஜ் பகாதர் ஆகியோர் இப்படத்தின் தேவுடா பாடலில் சிறப்புக் காட்சியில் தோன்றியிருந்தனர்.[1][2][3]

கதைதொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் மனோதத்துவ நிபுணராகப் படிப்பை முடித்து விட்டு இந்தியாவிற்கு வருகின்றார் சரவணன் (ரஜினிகாந்த்) அங்கு தன் நண்பரான செந்தில் நாதனையும் (பிரபு) அவரின் மனைவி கங்காவைவும் (ஜோதிகா) சந்திக்கின்றார்.செந்தில் நாதனுடைய சொந்த ஊருக்குச் செல்கின்றனர் அனைவரும்.அங்கு செல்லும் செந்தில் நாதன் பல முறை உறவினர்கள் வேண்டாம் என்று எடுத்துக் கூறியிருந்தும் வேட்டையபுரம் அரண்மனையினை விலைக்கு வாங்கி பின்னர் அங்கு குடியிருக்க ஏற்பாடுகளையும் செய்கின்றார்.பின்னர் அங்கு அனைவரும் சென்று தங்குகின்றனர்.

ஆரம்பத்தில் அமைதியாக இருந்த அவ்வீட்டினுள் அமைந்திருக்கும் ஒரு அறையினுள் செல்ல யாரும் அனுமதிக்கப் படவில்லை இதனையும் பொருட்படுத்தாது வேலைக்காரரின் பேர்த்தியான துர்காவின் (நயன்தாரா) உதவியுடன் அங்கு செல்லும் கங்கா தன்னை அறியாது பலமுறைகளில் கோபம் கொள்கின்றார் மேலும் அங்கிருக்கும் துர்கா மீதும் வீண் பழிகளைச் சுமத்துகின்றார்.இவரின் நடைமுறைகளில் பல மாற்றங்கள் தோன்றுவதைக் கண்ட சரவணனும் இவரின் நடவடிக்கை பலவனவற்றை நோட்டம் விடுகின்றார். பின்னர் அனைவருக்கும் கங்காவிடம் ஆவி புகுந்திருப்பதனையும் விளக்குகின்றார்.அதாவது சுமார் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கு சந்திரமுகி என்னும் பெண் வேட்டையபுரம் அரண்மனையில் ராஜாக்கள் முன்னிலையில் நடனமாட வேட்டையன் எனும் ராஜாவால் அழைக்கப்பட்டு வந்தான் என்றும் அவளை அடைவதற்காக அவ்வரண்மனையின் அருகில் இருக்கும் அவளின் காதலனின் தலையை அவள் முன்னேயே துண்டித்தான் அம்மன்னன். மேலும் சந்திரமுகியை உயிரோடு எரித்துக் கொல்லப் பட்டதாகவும் எனவே அவளின் ஆவி இன்றுவரை அவ்வரண்மனையில் உலவுவதாகவும் சரவணன் அனைவருக்கும் விளக்கினார். மேலும் சந்திரமுகியின் ஆவி கங்காவின் உடம்பினுள் புகுந்து கொண்டிருக்கின்றது அதே வேளை அவளின் ஆவியை ஓட்டுவதற்கு சந்திரமுகி கொல்லப்பட்ட நாளான துர்காஸ்தமியில் அவள் ஆவி மந்திரவாதியின் உதவியுடன் ஓட்டப்பட வேண்டும் எனவும் விளக்கினார்.இவ்வாறு அவர்கள் செய்தனர். இறுதியில் சந்திரமுகியின் ஆவியும் கங்காவின் உடலை விட்டு நீங்கிச் செல்கின்றது.

பாடல்கள்தொகு

  1. தேவுடா தேவுடா ([எஸ். பி. பாலசுப்ரமணியம்])
  2. கொக்கு பறபற (திப்பு, மாணிக்க விநாயகம், ராஜலெட்சுமி)
  3. அத்திந்தோம் திந்தியும் ([எஸ். பி. பாலசுப்ரமணியம்] மற்றும் வைசாலி)
  4. கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் ([ஆஷா போன்ஸ்லே] மற்றும் மது பாலகிருஷ்ணன்)
  5. ராரா சரசகு ராரரா (பின்னி கிருஷ்ணகுமார் மற்றும் திப்பு)
  6. அண்ணனோட பாட்டு (கே கே, [கார்த்திக்], [சுஜாதா மோகன்] மற்றும் சின்னப்பொன்னு)

வெளி இணைப்புகள்தொகு


  1. "Cast and Crew". Oneindia Entertainment. மூல முகவரியிலிருந்து 30 September 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 30 September 2014.
  2. Vijayasarathy R. J. (13 June 2007). "Meet the bus driver Rajni worked with". ரெடிப்.காம். மூல முகவரியிலிருந்து 6 November 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 November 2014.
  3. Kumar, S. R. Ashok (14 June 2005). "Rajni's gesture". தி இந்து. மூல முகவரியிலிருந்து 23 December 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 December 2014.