சந்தோஷ் குமார் கங்க்வார்

இந்திய அரசியல்வாதி

சந்தோஷ் குமார் கங்க்வார் (Santosh Kumar Gangwar, பிறப்பு: 01 நவம்பர் 1948) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சரும் ஆவார்.[1][2]

சந்தோஷ் குமார் கங்க்வார்
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு)
பதவியில்
03 செப்டம்பர் 2017 - 07 சூலை 2021
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்பி. தத்தாத்திரேயா
நிதி அமைச்சர்
பதவியில்
05 சூலை 2016 – 03 செப்டம்பர் 2017
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்ஜெயந்த் சின்ஹா
பின்னவர்சிவ பிரதாப் சுக்லா
ஜவுளித்துறை அமைச்சர்
பதவியில்
26 மே 2014 – 05 சூலை 2016
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்கவுரி சம்பா சிவராவ்
பின்னவர்இசுமிருதி இரானி
நாடாளுமன்ற உறுப்பினர்
பரேலி தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
முன்னையவர்பிரவீன் சிங் அரோன்
பதவியில்
1989–2009
முன்னையவர்பேகம் அபிடா அகமத்
பின்னவர்பிரவீன் சிங் அரோன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 நவம்பர் 1948 (1948-11-01) (அகவை 75)
பரேலி, ஐக்கிய மாகாணம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்பரேலி
முன்னாள் கல்லூரிஆக்ரா பல்கலைக்கழகம்
ரோகில்கந்து பல்கலைக்கழகம்
As of 22 செப்டம்பர், 2006
மூலம்: [1]

இளமைக் காலம்

தொகு

இவர் 01 நவம்பர், 1948 ஆம் ஆண்டு பரேலியில் பிறந்தார். இவர் தோல் நிறமி இழத்தலால் பாதிக்கப்பட்டவர்.[3] இவர் உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ரா பல்கலைக்கழகம் மற்றும் ரோகில்கந்து பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளை முடித்தார். இவருக்கு சௌபாக்கியா என்னும் மனைவியும், ஆபூர்வ் கங்க்வார் மற்றும் சுருதி கங்க்வார் என்னும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் அரசியலில் சேரும் முன்னர், பரேலி நகரில் உள்ள நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் வேலைப்பார்த்தார். பின்னர் 1996 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அதன் தலைவராகப் பதவி வகித்தார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

இவர் உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க குழுவில் உறுப்பினராக பணியாற்றினார். பின்னர் 1996 ஆம் ஆண்டு உத்தரபிரதேச பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தார்.

இவர் 1989 ஆம் ஆண்டு பரேலி தொகுதியில் இருந்து 9வது மக்களவைக்கு முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1989 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலும், பின்னர் 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலும் பரேலி தொகுதியிலிருந்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் இந்தியாவின் அமைச்சரவையில் பதவிகளை வகித்துள்ளார். இவர் 13வது மக்களவையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராக கூடுதல் பொறுப்பு வகித்தார். இதற்கு முன்னர், 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக கூடுதல் பொறுப்பு வகித்தார்.

இவர் 16வது மக்களவை உறுப்பினராக இருந்த போது மே 26, 2014 ஆம் ஆண்டு முதல் சூலை 05, 2016 வரை அவர் ஜவுளித்துறை அமைச்சராக பணியாற்றினார். அதன் பின்னர் நிதியமைச்சராக பதவியேற்றார்.[4]

1989 ஆம் ஆண்டில் தேசிய அரசியலில் நுழைந்த இவர், 9வது மக்களவைத் தேர்தலில் பரேலி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1996 ஆம் ஆண்டு உத்தரபிரதேச பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தார். பின்னர் அவர் அதே தொகுதியில் 2009 வரை ஆறுமுறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற 15வது மக்களவை தேர்தலில், குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.business-standard.com/article/politics/profile-meet-the-new-ministers-of-state-for-finance-116070600336_1.html
  2. http://www.elections.in/government/cabinet-ministers.html
  3. http://www.elections.in/political-leaders/santosh-kumar-gangwar.html
  4. "Aadhaar law will ensure Direct Benefit Transfer reaches genuine beneficiaries: FM Jaitley", Daily News and Analysis, 15 July 2016
  5. "PM Modi allocates portfolios. Full list of new ministers", Live Mint, 31 May 2019