சன்ஹிதா நந்தி

சன்ஹிதா நந்தி கிராணா கரானாவின் ஒரு முக்கிய இந்துஸ்தானி பாரம்பரிய பாடகர் ஆவார். [1] [2] மெதுவான இசைவேக ராக வளர்ச்சி (குரல் கலாச்சாரம், குரல் வீச்சு மற்றும் சுருதி பயன்பாடு) மற்றும் அலங்கார சர்காம்கள் ஆகியவை அவரது பாணியின் மைய அம்சமாகும். அவரது இசை ஆசிரியர் மஷ்கூர் அலி கானினின் வழிகாட்டுதலின் கீழ் இசைப்பயிற்சியைப் பெற்றார்.

சங்கிதா நந்தி
தொழில்(கள்)இந்துஸ்தானி பாம்பரிய குரலிசை, கிரானா கரானா
இணையதளம்sanhitanandi.com

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

சன்ஹிதா நந்தி ஐடிசி சங்கீத் ஆராய்ச்சி அகாதமியின் .மூத்த குருவான மறைந்த கிரானா கரானா இசைப் பயிற்சியாளர் ஏ கனன் அவா்களின் கீழ் பயிற்சி பெற்றார் , [3] சன்ஹிதா நந்தி இசை மற்றும் வரலாற்றில் இரட்டை பட்டத்தையும் உலக வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார். இசையின் சுருதிநயம், டோனல் துல்லியம், இசை நுண்ணொலி பயன்பாடு மற்றும் தொனி-இசைத்துண்டுகள், கிரானா கரானாவின் முக்கிய குணாதிசயம் ஆகியவற்றில் அவர் தனது தேர்ச்சி குறித்து பெரும் அங்கீகாரத்தையும் மதிப்புரைகளையும் பெற்றுள்ளார்.[4]

இசைத் தொழில் தொகு

 
புனேவில் சவாய் காந்தர்வாவில் சன்ஹிதா நந்தி நிகழ்ச்சி
 
குவாலியரில் டான்சன் சங்கீத் சமரோவில் சன்ஹிதா நந்தியின் நிகழ்ச்சி
 
ஹர்பல்லாப் சங்க சம்மேளனத்தில் சன்ஹிதா நந்தியின் பாடல் கச்சேரி.

சன்ஹிதா நந்தி இந்தியாவிலும் வெளிநாட்டிலும் பல இசைக் கச்சேரிகளை நிகழ்த்துவதற்காக விரிவான பயணம் செய்துள்ளார். சவாய் கந்தர்வ இசை விழா, குவாலியரில் உள்ள தான்சேன் சமோரா, அகமதாபாத் இசை சப்தக் விழா, ஜலந்தரில் உள்ள ஹர்பல்லாப் சங்கீத சம்மேளனம் கொல்கத்தாவில் உள்ள ஐடிசி சங்கீத் ஆராய்ச்சி அகாதமி , பெங்களூரில் உள்ள ஸ்பிக் மக்கே குருராவ் தேஷ்பாண்டே சங்கீத சபா அமிர்தசரஸில் உள்ள லக்ஷ்மி நாராயண் சங்கீத சமோரா , சென்னையில் உள்ள பரம்பரா நடனம் மற்றும் இசை விழா , சமாகமா விழா, கே.எம் இசை பாதுகாப்பகம் தர்வாத்தில் உள்ள உஸ்தாத் ரஹ்மத் கான் சங்கீத சம்மேளனம் , கோவாவில் உள்ள சாம்ராட் சங்கீத சம்மேளனம், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யஷ்வந்த் ராவ் சவுகான் ஸ்மிருதி சங்கீத சமோரா , ஹைதராபாத்தில் கிராணா கரானா இசை விழா, மற்றும் மும்பையில் உள்ள தாதர் மாதுங்கா கலாச்சார மையம் மற்றும் சங்கித் மகாபார்தி ஆகிய இசை விழாக்களில் கச்சேரிகளை நடத்தியுள்ளார்.

பிலடெல்பியாவில் உள்ள அன்னன்பெர்க் நிகழ்த்துக்கலைகள் மன்றம், பிலடெல்பியா கலைக் காட்சியகம், நியூயார்க்கில் சாண்டயன் முழு இரவுக் கச்சேரி, கார்னெல் பல்கலைக்கழகம், ட்ரெக்செல் பல்கலைக்கழகம், பாஸ்டனில் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் எட்மண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட்டா அருங்காட்சியகம் ஆகியவற்றில் இசை நிகழ்ச்சிகள் நடத்த அவர் அழைக்கப்பட்டுள்ளார்.,

டிஸ்கோகிராபி தொகு

சமீபத்திய இசைக்கச்சேரிகள் தொகு

2018 தொகு

மார்ச் 2018 - நியூ ஜெர்சி, செப்டம்பர் 2018 - நியூ ஜெர்சி, பிரிட்ஜ்வாட்டர் ஆடிட்டோரியம், நவம்பர் 30 2018 - அன்னன்பெர்க் மையம், பிலடெல்பியா, டிசம்பர் 2018 - டெல்லி, டிசம்பர் 2018 - சண்டிகர், டிசம்பர் 2018 - பெங்களூர், டிசம்பர் 2018 - மங்களூர்[5]

2017 தொகு

2017 ஜனவரி புது தில்லி, 2017 ஜனவரி கொல்கத்தா, ஜனவரி, ஏப்ரல் 2017 ஐ.சி.எம்.டி.எஸ், வட கரோலினா, 2017 அக்டோபர் இந்தியா இசை நிகழ்ச்சிகள், 2017 நவம்பர் - சண்டிகர், புனே, நாக்பூர், சோலாப்பூர், வாரணாசி

2016 தொகு

2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பஹாமாஸில் பாரம்பரிய இசை மற்றும் நடன விழா, 2017 ஆம் ஆண்டு மார்ச் நேரு மையம், லண்டன் - மார்ச் மாதம் கசல், தும்ரி மற்றும் கயால் விழா - ரிச்மிக்ஸ் தியேட்டர், லண்டன், மார்ச் 19 பிரஸ்ஸல்ஸ் , மார்ச் 20 நெதர்லாந்து , மார்ச் 22 பிரஸ்ஸல்ஸ்,சவுத் ஹாம்ப்டன், லண்டன், இசை அறை, லண்டன், மே கார்னெல் பல்கலைக்கழகம், அமெரிக்கா , மே IMSOM, அமெரிக்கா , அக்டோபர் செம்மொழி இசை மாநாடு, சண்டிகர் , அக்டோபர் 22 தேவல் கிளப், கோலாப்பூர் காலநிதி கலை இசை நிகழ்ச்சி, புனே -அக்டோபர் 23. கச்சேரி, புனே அக்டோபர்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்ஹிதா_நந்தி&oldid=3242983" இலிருந்து மீள்விக்கப்பட்டது