சன் செய்திகள்
சன் செய்திகள் என்பது சன் குழுமத்தின் துணை நிறுவனமான சன் டிவி நெட்வொர்க்கிற்கு சொந்தமான தமிழ் மொழி 24 மணி நேரச் செய்தி கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும்.[1] இந்த அலைவரிசை மே 7, 2000 ஆம் ஆண்டு முதல் சென்னையை தலைமையகமாகக் கொண்டு உலகளவில் இயங்கி வருகின்றது. இது இந்தியாவில் 95 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களைச் சென்றடைகிறது.
சன் செய்திகள் | |
---|---|
![]() | |
ஒளிபரப்பு தொடக்கம் | 7 மே 2000 |
வலையமைப்பு | சன் டிவி நெட்வொர்க் |
உரிமையாளர் | சன் குழுமம் |
மொழி | தமிழ் |
ஒளிபரப்பாகும் நாடுகள் | உலகளவில் (இந்தியா மலேசியா துபாய் சிங்கப்பூர் இலங்கை) |
தலைமையகம் | சென்னை தமிழ்நாடு |
துணை அலைவரிசை(கள்) | சன் தொலைக்காட்சி கே தொலைக்காட்சி சுட்டி தொலைக்காட்சி ஆதித்யா தொலைக்காட்சி சன் லைப் தொலைக்காட்சி |
வலைத்தளம் | Sun News |
வரலாறுதொகு
சன் செய்திகள் அலைவரிசையானது 2000ஆம் ஆண்டு ஏப்பிரல் 14ஆம் திகதி தொடங்கப்பட்டது. சன் குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறன் இந்தத் தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பித்து வைத்தார். இதன் செய்தி ஆசிரியராக தற்போது தமிழ்நாட்டின் தலைசிறந்த விவாத நெறியாள்கையாளரும் ஊடகவியலாளருமான மு. குணசேகரன் பொறுப்பேற்றுள்ளார்.
மேற்கோள்கள்தொகு
- ↑ "Sun TV Network History - Sun TV Network Information - The Economic Times". economictimes.indiatimes.com.