சப்னம் மசீத்
சப்னம் மசீத் (Shabnam Majeed) என்பவர் பாக்கித்தானிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பின்னணி பாடகி ஆவார்.
சப்னம் மசீத் Shabnam Majeed | |
---|---|
பிறப்பு | பாக்கித்தான் |
பணி | தொலைக்காட்சி திரைப்பட பின்னணிப் பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 1993 – முதல் |
விருதுகள் | பாக்கித்தான் தொலைக்காட்சி விருது -அனார்கலி 2006 |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுமசீத் அலியின் முன்னாள் கணவரும் இசை அமைப்பாளருமான வாசித் அலிக்கும் இவருக்கும் நான்கு குழந்தைகள் இருந்தனர். இவர்களின் மகன், நக்கி அலி (லக்கி அலி), 2010-ல் படிக்கட்டுகளிலிருந்து கீழே விழுந்து ஏழு வயதில் இறந்தார்.[1][2] மசீத் பிப்ரவரி 2020-ல் குலா (கணவனைப் பிரிந்து வாழ மனு) தாக்கல் செய்தார்.[3] மசீத்தின் சகோதரர் அப்துல் வாகித் 18 நவம்பர் 2020 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.[4] இந்தக் கொலைட் நடந்த 12 நாட்களுக்குப் பிறகு, கொலை விசாரணை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.[5]
தொழில்
தொகுசப்னம் மசீத் தனது 7 வயதில் இசை கற்கத் தொடங்கினார்.[1] தில் சீஸ் ஹை கியா என்ற ஒற்றை பாடலின் மறுபதிப்பு மூலம் பாக்கித்தானில் புகழ் பெற்றார். தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் என்ற ஆங்கில மொழி செய்தித்தாளில் 'லாலிவுட்டின் மிகச் சிறந்த பின்னணிப் பாடகிகளில் ஒருவர்' என்று வர்ணிக்கப்பட்டார்.[6]
பொதுச்சேவை
தொகு2016-ல், மசீத், அல்அம்ரா கலைக் குழுவுடன் இணைந்து, தெருக் குழந்தைகளுக்கு இசை கற்பிக்க ஒரு அமைப்பை உருவாக்கினார்.[1] லக்கி அலி அறக்கட்டளை என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு, இவரது மறைந்த மகனின் பெயரால் அழைக்கப்படுகிறது.[7] போதைக்கு அடிமையான குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தையும் மசீத் உருவாக்கியுள்ளார்.[2]
விருதுகள்
தொகு- 2006-ல் 'அனார்கலி' இசை காணொலிக்காகச் சிறந்த பாடகருக்கான விருதினை பாக்கித்தான் தொலைக்காட்சி வழங்கியது.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Lodhi, Adnan (1 February 2016). "Shabnam Majeed to teach music to street children". பார்க்கப்பட்ட நாள் 2 September 2022.
- ↑ 2.0 2.1 Ahmed, Shoaib (15 January 2016). "Shabnam Majeed – not just a melodious voice". பார்க்கப்பட்ட நாள் 2 September 2022.
- ↑ "Singer Shabnam Majeed filed for divorce from her husband Wajid Ali". Times of Islamabad. 8 February 2020. பார்க்கப்பட்ட நாள் 2 September 2022.
- ↑ "Singer Shabnam Majeed's brother murdered". The News International (newspaper). 18 November 2020. https://www.thenews.com.pk/print/745374-singer-shabnam-majeed-s-brother-murdered.
- ↑ "Police solve mystery behind murder of Shabnam Majeed's brother". ARY TV News website. 30 November 2020. பார்க்கப்பட்ட நாள் 2 September 2022.
- ↑ Lodhi, Adnan (18 April 2017). "Pakistani cinema has not given a single hit song recently: Shabnam Majeed of 'Supreme Ishq' fame". The Express Tribune (newspaper). https://tribune.com.pk/story/1387053/pakistani-cinema-not-given-single-hit-song-off-late-shabnam-majeed-supreme-ishq-fame.
- ↑ Ahmed, Shoaib (28 October 2018). "Shabnam Majeed aims to turn street children into singers". பார்க்கப்பட்ட நாள் 2 September 2022.
- ↑ 13th PTV Awards: Firdaus Jamal, Shagufta Aijaz adjudged best actor, actress Business Recorder (newspaper), Published 17 July 2006, Retrieved 2 September 2022