சமத்துவ பொருளாதாரவாதிகளின் மாநாடு

சமத்துவ பொருளாதாரவாதிகளின் மாநாடு (Conference of Socialist Economists) சமத்துவ / சமூக பொருளாதாரவாதிகளின் மாநாடு தன்னை ஒரு சர்வதேச, ஜனநாயக உறுப்பினர் அமைப்பு என்று விவரிக்கிறது. இந்த மாநாடு, முதலாளித்துவத்தின், குறைகளை விமர்சனம் செய்வது மட்டுமின்றி ஏனைய கல்வி முறைகளை பாதுகாக்கவும் அடித்தளமாய் விளங்க முயல்கிறது.

வரலாறு தொகு

1960 களில் ஐக்கிய தேசியத்தில் சமத்துவ / சமூக அரசியலின் பொது எழுச்சியில் ஹரோல்ட் வில்சன் தொழிற்கட்சி அரசாங்கத்தை தவறான பாதையில் முன்னெடுத்துச் சென்றார். மேலும் மரபார்ந்த பொருளாதார தத்துவத்துடன் சமத்துவ பொருளாதாரவாதிகளின் கருத்துக்கள் முரண்பாடு கொண்டவையாக இருந்தது.

1970 ஜனவரியில் முதல் மாநாட்டில் பிரதான பொருளாதார வல்லுனர்கள் 75 பேர், மூலதன சர்ச்சை, வளர்ச்சிப் பொருளாதாரம் மற்றும் மூலதனத்தின் சர்வதேசமயமாக்கல் பற்றிய ஆவணங்களை விவாதித்தனர். அதே ஆண்டு அக்டோபரில் இரண்டாவது மாநாட்டில் 125 பங்கேற்பாளர்கள் பங்கேற்று, வெளிநாடுகள் உட்பட 20 நபர்களின் மூலதனத்தை ஈர்த்தனர். மேலும் நவீன முதலாளித்துவத்தின் மாநில பொருளாதார பங்கைக் கருத்தில் கொண்டார்கள்.

இந்த நிகழ்வு, CSE ஒரு நிரந்தர அமைப்பாக அமைவதற்கும், பிரிட்டனிலும் EEC யிலும் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்வதற்கும், ஒரு பத்திரிக்கை தொடங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இந்த மாநாடு (டிசம்பர் 1971) இன் தகவலறிக்கை வெளியிடப்பட்டது. முதல் மாநாட்டில் நான்கு நாடுகள் 1977 ஆம் ஆண்டில் மூலதனம், வகுப்புகள் பற்றிய தகவலறிக்கையை முழுமையாக வெளியிட்டது.

சமூக பொருளாதாரவாதிகளின் கூற்றுப்படி, மூலதனம் மற்றும் வகுப்புகள் வழக்கமான கல்வி பிரிவுகளின் கீழ் எளிமைபடுத்தாத பிரிவுகளாக இயங்குகின்றன. சமூக பொருளாதாரவாதிகளில் ஒரு சிலரே தொழில்முறை பொருளாதார வல்லுநர்களாக உள்ளனர். மேலும் தகவலறிக்கை, செய்திகள், ஊடகங்கள் என அனைத்திலும் ஈடுபாட்டுடன் செயல்படுகின்றனர்.

சமூக பொருளாதாரவாதிகளின் ”பொது அறிவு” / ”பொது சிந்தனை” என்ற இதழே, எடின்பார்க்கில் நடந்த மாநாட்டின் அடிநாதமாகும். [1]

நூற்பட்டியல் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Common Sense". libcom.org. பார்க்கப்பட்ட நாள் 2016-12-19.

நூல்தொகை தொகு

  • Barratt Brown, Michael. "In honour of the 50th issue of Capital & Class and the approaching 25th anniversary of the CSE". Capital & Class 50: 7–9. 
  • Lee, Frederic S. (2001). "Conference of Socialist Economists and the emergence of heterodox economics in post-war Britain". Capital & Class 75 (3): 15–39. doi:10.1177/030981680107500102. 

வெளி இணைப்புகள் தொகு