சமநிலையில்லா சட்டங்கள்

சமநிலையில்லாச் சட்டங்கள் (Uneven Bars) அல்லது ஒரு சீரில்லா சட்டங்கள் (asymmetric bars) ஓர் கலைநய சீருடற் பயிற்சி கருவியாகும். இதனை பெண் சீருடற் பயிற்சியாளர்கள் மட்டுமே பயன்படுத்துவர். இதன் சட்டகம் எஃகினால் ஆனது. சட்டங்கள் கண்ணாடியிழைகளால் ஆக்கப்பட்டு மரப் பூச்சு கொடுக்கப்பட்டிருக்கும்; அரிதாக மரத்தினாலும் செய்யப்பட்டிருக்கும்.[1] சீருடற் பயிற்சிகளில் மதிப்பெண் இடும்போது இந்த நிகழ்ச்சிக்கு ஆங்கிலச் சுருக்கமாக UB அல்லது AB, கொடுக்கப்படுகிறது. இரு சட்டங்களும் வெவ்வேறு உயரங்களில் அமைக்கப்பட்டிருப்பதால் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு தாவுவதற்கு எளிதாக உள்ளது.

ஓர் பெரும் ஊசலாடலை நிகழ்த்தும் சீருடற்பயிற்சியாளர்
பயிற்சிக்கான வரிசை

விளையாட்டுக் கருவிதொகு

பன்னாட்டு சீருடற்பயிற்சி போட்டிகளில் பயன்படுத்தப்படும் சமநிலையில்லாச் சட்டங்கள் பன்னாட்டு சீருடற்பயிற்சிகள் கூட்டமைப்பு (FIG) வரையறுக்கும் விவரக்கூற்றுகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கேற்ப அமைந்திருக்க வேண்டும்.

தங்கள் பயிற்சிகளுக்கு சீருடற்பயிற்சியாளர்கள் பெரும்பாலும் ஒரு சட்டத்தையே பயன்படுத்துவர்; பாதுகாப்புக்காகவும் எளிதான கவனப்படுத்தலுக்காகவும் இவ்வாறு பயில்கின்றனர்.

அளவைகள்தொகு

பன்னாட்டு சீருடற்பயிற்சிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கருவி அளவைகள் சிற்றேட்டின்படி:

  • உயரம்:
    • மேல் சட்டம்: 250 சென்டிமீட்டர்கள் (8.2 ft)[1]
    • கீழ் சட்டம்: 170 சென்டிமீட்டர்கள் (5.6 ft) [1]
  • சட்டத்தின் விட்டம்  : 4 சென்டிமீட்டர்கள் (0.13 ft) [2]
  • சட்டங்களின் நீளம் : 240 சென்டிமீட்டர்கள் (7.9 ft) [2]
  • இரு சட்டங்களுக்கிடையேயான மூலைவிட்டம் : 130 சென்டிமீட்டர்கள் (4.3 ft)–180 சென்டிமீட்டர்கள் (5.9 ft) (adjustable) [2]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 1.2 "Gymnastics Internationals Federation: About WAG". FIG. 2012-11-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-10-02 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 "Apparatus Norms". FIG. p. II/47. 2011-12-19 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2009-10-02 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புக்கள்தொகு