சமுனாமரத்தூர்
சமுனாமரத்தூர் (அ) ஜமுனாமரத்தூர் திருவண்ணாமலை மாவட்டத்தில் , புதிதாக அமைக்கப்பெற்ற ஜமுனாமரத்தூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம், பேரூராட்சி மற்றும் ஜவ்வாது மலை வாசத்தலம் ஆகும்.1/1/2024 சமுனாமரத்தூர் நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
சமுனாமரத்தூர்
JAMUNAMARATHUR ஜவ்வாது மலை | |
---|---|
அடைபெயர்(கள்): ஜமுனாமரத்தூர், ஜவ்வாது மலையிலுள்ள மலை நகரம் | |
ஆள்கூறுகள்: 12°35′39″N 78°53′18″E / 12.5941995°N 78.8884047°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மண்டலம் | தொண்டை மண்டலம் |
வருவாய் கோட்டம் | ஆரணி |
சட்டமன்றத் தொகுதி | கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி | திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி |
தோற்றுவித்தவர் | தமிழ்நாடு அரசு |
அரசு | |
• வகை | தேர்வு நிலை பேரூராட்சி |
• நிர்வாகம் | ஜமுனாமரத்தூர் பேரூராட்சி |
• வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் | ஆரணி |
• மக்களவை உறுப்பினர் | சி.அண்ணாதுரை |
• சட்டமன்ற உறுப்பினர் | பன்னீர் செல்வம் |
• மாவட்ட ஆட்சியர் | கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப. |
• பரப்பளவு தரவரிசை | 7200 மீட்டர்கள் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 6,900 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீடு | 635 703 |
இந்தியாவில் தொலைபேசி எண்கள் | 91 -4181 |
வாகனப் பதிவு | TN 97 & TN 25 |
ஊராட்சி ஒன்றியம் | ஜவ்வாது மலை |
சென்னையிலிருந்து தொலைவு | 217 கி.மீ. |
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 76 கி.மீ. |
வேலூரிலிருந்து தொலைவு | 83 கி.மீ. |
ஆரணியிலிருந்து தொலைவு | 68 கி.மீ. |
போளூரிலிருந்து தொலைவு | 44 கி.மீ. |
கலசப்பாக்கத்திலிருந்து தொலைவு | 52 கி.மீ. |
திருப்பத்தூரிலிருந்து தொலைவு | 53 கி.மீ. |
இணையதளம் | ஜமுனாமரத்தூர் பேரூராட்சி |
அமைவிடம்
தொகுஇது சவ்வாது மலையில் இருக்கும் புகழ் பெற்ற நகராகும். மேலும் ஜவ்வாது மலையின் முக்கிய சந்தை பகுதியும், மக்கள் கூடும் இடமும் ஆகும். அதுமட்டுமில்லாமல் மாவட்ட தலைமையிடமான திருவண்ணாமலையிலிருந்து 76 கிமீ தொலைவிலும், போளூரிலிருந்து 44 கிமீ தொலைவிலும், ஆரணியிலிருந்து 68 கிமீ தொலைவிலும், செங்கத்திலிருந்து 48 கிமீ தொலைவிலும், கலசப்பாக்கத்திலிருந்து 52 கிமீ தொலைவிலும், வேலூரிலிருந்து 83 கிமீ தொலைவிலும், திருப்பத்தூரிலிருந்து 53 கிமீ தொலைவிலும், வாணியம்பாடியிலிருந்து 40 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
நிர்வாகம் மற்றும் அரசியல்
தொகுசமுனாமரத்தூர் நகரம் கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிகற்கும் உட்பட்டதாகும். இந்த நகரத்தை சமுனாமரத்தூர் பேரூராட்சியின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
வருவாய் வட்டம்
தொகுதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் சமுனாமரத்தூர் வட்டமும் ஒன்றாகும். இந்த வட்டத்தை 2016 ஆம் ஆண்டு போளூர் வட்டத்தின் மேற்கு பகுதிகளையும் மற்றும் செங்கம் வட்டத்தின் வடக்கு பகுதிகளையும் கொண்டு இந்த வட்டம் உருவாக்கப்பட்டது. இந்த வட்டத்தில் 42 வருவாய் கிராமங்களையும், 47,271 மக்கள்தொகையும் கொண்டது. இந்த வட்டத்தில் சமுனாமரத்தூர் பேரூராட்சி மற்றும் சவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம் ஆகியவை அமைந்துள்ளது. இந்த வட்டம் ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள வருவாய் வட்டமாகும்.
சாலை வசதிகள்
தொகுசமுனாமரத்தூரில் சாலை வசதிகள் பொறுத்த வரை மலைகளின் நடுவே வலை பின்னலாக அமைந்துள்ளது.
- சமுனாமரத்தூர் - அமிர்தி சாலை
- ஆரணி - போளூர் - சமுனாமரத்தூர் சாலை
- திருவண்ணாமலை - போளூர் - சமுனாமரத்தூர் சாலை
- செங்கம் - சமுனாமரத்தூர் சாலை
- சமுனாமரத்தூர் - ஆலங்காயம் - வாணியம்பாடி சாலை
- திருப்பத்தூர் - ஆலங்காயம் - சமுனாமரத்தூர் சாலை
- சமுனாமரத்தூர் - ஆலங்காயம் - ஒடுகத்தூர் - அணைக்கட்டு - வேலூர் சாலை
ஆகிய முக்கிய சாலைகள் சமுனாமரத்தூர் நகரை இணைக்கிறது.
போக்குவரத்து வசதிகள்
தொகுசமுனாமரத்தூர் நகரில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, திருப்பத்தூர், போளூர், ஆம்பூர், வாணியம்பாடி, செங்கம், கலசப்பாக்கம் ஆகிய நகரங்களில் இருந்து நேரடியாக பேருந்து சேவைகள் உள்ளது.
மக்கள் தொகை
தொகு2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு 6,000 மக்கள் வாழ்கிறார்கள். மேலும் இது சவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையகம் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. பார்க்கப்பட்ட நாள் 21 June 2017.