சம்பகமாலிகா
சம்பகமாலிகா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 17 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப்படும் 3 ஆவது சக்கரத்தின் 5 ஆவது சூர்யகாந்த இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.