சம்பேலஸ்

பிலிப்பைன்ஸ் மாகாணம்

சம்பேலசு (Zambales) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், மத்திய லூசோன் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஏழு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் இபா ஆகும். இது 1578 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இம்மாகாணத்தில் 230 கிராமங்களும், 13 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் அமர் டெலோசோ ( Amor Deloso) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 3,053.6 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக சம்பேலசு மாகாணத்தின் சனத்தொகை 590,848 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 35ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 50ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு , ஆங்கிலம், கப்பம்பங்கன் உள்ளடங்கலாக ஆறு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தின் பொருளாதாரம் சுற்றுலாத்துறையிலேயே தங்கியுள்ளது. மேலும் இமாகாணத்தின் நிக்கல் போன்றவற்றை அகழ்தலும் அதிகளவில் தற்போது இடம்பெற்று வருகிறது. எனினும் அடிப்படையில் இது விவசாய மாகாணமே ஆகும். இங்கு அரிசி, சோளம் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன.

சம்பேலசு
மாகாணம்
மாகாணத் தலைமையகம்
மாகாணத் தலைமையகம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்மத்திய லூசோன்
நேர வலயம்பிசீநே (ஒசநே+8)
அதிகாரப்பூர்வ இணையதளம்

மேற்கோள்கள் தொகு

  1. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. Archived from the original on 21 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |https://www.webcitation.org/6DpMOBTiK?url= ignored (help)
  2. PromdiNEWS: Bulacan celebrates 435th founding year
  3. "Population of the provine". Archived from the original on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-05.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பேலஸ்&oldid=3552956" இலிருந்து மீள்விக்கப்பட்டது