சர்வர் சுந்தரம் (வெளியாகவுள்ள திரைப்படம்)

வெளியாகவுள்ள திரைப்படம்

சர்வர் சுந்தரம் (Server Sundaram) ஆனந்த் பால்கி எழுதி இயக்கி வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ் மொழி அதிரடி நகைச்சுவைத் திரைப்படமாகும். இந்தப்படத்தை ஜே. செல்வகுமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சர்வர் சுந்தரம்
இயக்கம்ஆனந்த் பால்கி
தயாரிப்புஜே. செல்வகுமார்
கதைஆனந்த் பால்கி
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்புசந்தானம்
வைபவி சாண்டில்யா
ஒளிப்பதிவுபிகே வர்மா
படத்தொகுப்புதினேஷ் பொன்ராஜ்
கலையகம்கெனன்யா பிலிம்ஸ்
மிராக்கிள் மூவிஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு தொகு

தயாரிப்பு தொகு

திசம்பர் 2015இல், அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி சந்தானம் முக்கிய கதாபாத்திரத்திலும் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகவும் ஒரு படம் தயாரிக்கப் போவதாக அறிவித்தார்.[1] விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் சரவணன் ஆனந்த் பால்கியின் படத்திற்கு 1964இல் வெளியான சர்வர் சுந்தரம் படத்தின் பெயருக்காக நடிகர் நாகேஷின் குடும்பத்துடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, நாகேஷின் பேரன் பிஜேஷும் ஒரு சமையல்கலை கல்லூரி மாணவராக துணை வேடத்தில் நடிக்க குழு தேர்வு செய்தது. படத்தின் முக்கிய பகுதிகள் சென்னை எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சுற்றி படமாக்கப்பட்டது.

ஒரு உணவு பரிமாறும் பாத்திரத்திற்காக, சந்தானம் ஐந்து நட்சத்திர உணவகத்தில் பயிற்சி பெற்றார். மேலும் உணவகத்தின் ஊழியர்களிடமிருந்து திறன்களைக் கற்றுக்கொண்டார்.[2] படத்தின் முதல் தோற்ற வெளியீடு சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு 20 சனவரி 2016 அன்று வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் இந்த திட்டம் சென்னை, கோவா மற்றும் துபாயில் படமாக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.[3] சூன் 2016இல், யூடியூப் நடனக் கலைஞர்களான பூனம் மற்றும் பிரியங்கா ஷா ஆகியோருடன் ஆத்திரேலியாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஒரு பாடலை படக்குழு படமாக்கியது.[4] அக்டோபர் 2016 இறுதியில் படப்பிடிப்பு முடிவடைந்தது.[5]

ஒலிப்பதிவு தொகு

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் ஒலிப்பதிவு ஐந்து பாடல்களைக் கொண்டுள்ளது. அவற்றில் நான்கு பாடல்கள் 36 வயதினிலே, ஜில்.ஜங்.ஜக் புகழ் விவேக் வேல்முருகன் எழுதியுள்ளார். "கண்ணால் மோதாதே" என்ற ஐந்தாவது பாடலை எனக்குள் ஒருவன், விக்ரம் வேதா புகழ் முத்தமிழ் எழுதியுள்ளார்.

வெளியீடு தொகு

படம் முதலில் 7 செப்டம்பர் 2017 இல் வெளியிடத் திட்டமிடப்பட்டது.[6][7] மேலும் தாமதங்களுக்குப் பிறகு,[8] மிஸ்டர். சந்திரமௌலி படத்துடன் போட்டியிடுவதைத் தவிர்ப்பதற்காக மீண்டும் தாமதப்படுத்தி 6 சூலை 2018,[9] வெளியிடத் திட்டமிடப்பட்டது.[10] ஒரு வருடத்திற்கும் மேலாக முடக்கத்தில் இருந்த பிறகு, அது 31 சனவரி 2020க்கு மீண்டும் திட்டமிடப்பட்டது.[11] சந்தானத்தின் மற்ற படமான டகால்ட்டி [12] போட்டியைத் தவிர்ப்பதற்காக பிப்ரவரி 14க்கு ஒத்திவைக்கப்பட்டது.[13] திட்டமிட்ட தேதியில் வெளியிடத் தவறிய பிறகு, படத்திற்கு புதிய வெளியீட்டு தேதி இதுவரை வெளியிடப்படவில்லை.[14]

சான்றுகள் தொகு

  1. "Santhanam is the hero of Balki's debut film". The Times of India.
  2. admin (2 December 2020). "Santhanam to be trained in five star hotel for Server Sundaram". Heytamilcinema.com. Archived from the original on 2 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 16 அக்டோபர் 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Actor-comedian Santhanam is a huge fan of Nagesh: Anand Balki". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/kollywood/220116/santhanam-is-a-huge-fan-of-nagesh-anand-balki.html. 
  4. "Twins poonam and priyanka to dance in santa's film | Tamil News — Times of India". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 28 February 2017.
  5. "Cop role beckons Santhanam". Deccanchronicle.com. 28 October 2016. பார்க்கப்பட்ட நாள் 28 February 2017.
  6. "'Server Sundaram' to release on Sep 7". http://www.sify.com/movies/server-sundaram-to-release-on-sep-7-news-tamil-ridkMhghdgdbj.html. 
  7. "Nayanthara's Aramm and Santhanam's Server Sundaram get a release date!". 2 September 2017. http://indianexpress.com/article/entertainment/tamil/nayantharas-aramm-and-santhanams-server-sundaram-get-a-release-date4825647/. 
  8. "Santhanam involved in a fistfight, gets injured". 10 October 2017. http://indianexpress.com/article/entertainment/tamil/santhanam-involved-in-a-fistfight-gets-injured-4883227/. 
  9. "Santhanam's long delayed 'Server Sundaram' to release on July 6". 18 May 2018. http://www.sify.com/movies/santhanam-s-long-delayed-server-sundaram-to-release-on-july-6-news-tamil-sfskIKjhecijf.html. 
  10. "'Mr.Chandramouli' to have a big solo release this Friday". சிஃபி. 2 July 2018. Archived from the original on 28 June 2019. பார்க்கப்பட்ட நாள் 30 January 2020.
  11. "Santhanam's Server Sundaram to be released on Jan 31st". The Times of India. January 11, 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-01-21.
  12. "'Server Sundaram' producer makes way for Santhanam's 'Dagaalty'; postpones release date". The Times of India. January 29, 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-01-30.
  13. "Santhanam's 'Server Sundaram' gets postponed again". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 February 2020. Archived from the original on 12 February 2020. பார்க்கப்பட்ட நாள் 12 February 2020.
  14. "Santhanam's 'Biskoth' first look out". 8 March 2020.

வெளி இணைப்புகள் தொகு