சலிம்கர் கோட்டை

சலிம்கர் கோட்டை ( இந்தி: सलीमगढ़ किला , உருது: سلیم گڑھ ‎ ، அதாவது "சலீமின் கோட்டை") கி.பி 1546 இல் டெல்லியில், யமுனை ஆற்றின் முன்னாள் தீவில், சேர் ஷா சூரியின் மகன் சலீம் ஷா சூரி என்பவரால் கட்டப்பட்டது. கி.பி 1540 இல் ஷெர் ஷா சூரி முகலாய பேரரசர் நசிருதீன் உமாயூனைத் தோற்கடித்து (அவரை தில்லியில் இருந்து வெளியேற்றினார்) தில்லியில் சூர் வம்ச ஆட்சியை நிறுவியபோது முகலாய ஆட்சியில் இடைநிறுத்தம் ஏற்பட்டது. கி.பி 1555 வரை சூர் வம்ச ஆட்சி நீடித்தது. சூர் வம்சத்தின் கடைசி ஆட்சியாளரான சிகந்தர் சூரியை தோற்கடித்து நசிருதீன் உமாயூன் தனது ராஜ்யத்தை மீண்டும் பெற்றார். முகலாய காலத்தில், பிற்காலத்தில், செங்கோட்டை மற்றும் ஷாஜகான்பாத் கட்டும் போது, கி.பி 1639 இல் ஷாஜகானாபாத்தை முடித்த பெருமைக்குரிய பேரரசர் ஷாஜகான் உட்பட பல முகலாய ஆட்சியாளர்கள் இந்த கோட்டையில் முகாமிட்டிருந்தனர். தில்லியை மீண்டும் கைப்பற்றுவதற்காக நசிருதீன் உமாயூன் தனது தாக்குதலைத் தொடங்குவதற்கு முன், மூன்று நாட்கள் இந்த கோட்டையில் முகாமிட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. [1] [2]

முகலாயப் பேரரசரான அவுரங்கசீப்கோட்டையைச் சிறைச்சாலையாக மாற்றினார். 1857 ஆம் ஆண்டில் கோட்டையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்களாலும் இந்தக் கோட்டை சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்டது. கோட்டை செங்கோட்டை வளாகத்தின் ஒரு பகுதியாகும். இந்த வளாகம் 2007 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. இது பாரம்பரிய நினைவுச்சின்னங்களுக்காக நன்கு திட்டமிடப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASL) கடமைப்பட்டுள்ளது.[1]

வரலாறு

தொகு

கோட்டையைக் கட்டியெழுப்பத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் தில்லி சமவெளிகளில் (80-110 அடி (24–34 மீ) உயரத்தில் இருந்தது, ஒருபுறம் யமுனா நதியாலும், மறுபுறம் அரவள்ளி மலைத்தொடர்களின் வடக்கு குவடுகளாலும் சூழப்பட்டிருந்தது. கோட்டையின் இருப்பிடத்தில் பாறை வெளிப்பாடுகளுடன் கூடிய இந்த நிலப்பரப்பு, வடகிழக்கு டிரெண்டிங் ரிட்ஜ் மற்றும் பிரதான மசூதி (ஜமா மஸ்ஜித்) ஆகியவற்றுடன் சாதகமான தொடர்பைக் கொண்டு, யமுனா நதியின் அரிப்புக்கு எதிராக தேவையான பாதுகாப்பை வழங்கும் ஒரு சிறந்த அமைப்பாக காட்சிப்படுத்தப்பட்டது. கோட்டையின் ஒரு புறம் மற்றும் ஒரு மலைப்பாதையும் படையெடுப்பாளர்கள் தில்லிக்குள் ஊடுருவுவதற்கு தடையாக இருக்கும் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. ஏனெனில் இந்த ஒரு அமைப்பானது படையெடுப்பாளர்களை நதிப் பாதையைப் பின்பற்றும்படி கட்டாயப்படுத்தும். இந்த நன்மைகளைக் கருத்தில் கொண்டு சலிம்கர் கோட்டை 1546 இல் கட்டப்பட்டது.

சிறைச்சாலையாக

தொகு

அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில், கோட்டை முதலில் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. அவுரங்கசீப்பால் தனது சகோதரர் முராத் பக்ஷை (முத்ராவில் குடித்துவிட்டு தூங்கும்போது அவர் அறியாமல் பிடிபட்டார்) சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் குவாலியருக்கு மாற்றப்பட்டு, அங்கு அவர் தூக்கிலிடப்பட்டார். முராத் பக்ஷை சிறையில் அடைப்பதைத் தவிர, தனக்கு பிடித்த மூத்த மகள் செபுன்னிசாவை சலீம்கார் கோட்டையில் இறக்கும் வரை 21 ஆண்டுகள் சிறையில் அடைத்த சந்தேகத்திற்குரிய பெருமை அவுரங்கசீப்பிற்கு இருந்தது என்றும் கூறப்படுகிறது. [3] [4] நசிருதீன் உமாயூன் கல்லறையில் கைதியாக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் பர்மாவின் யங்கோனுக்கு மாற்றப்பட்ட பின்னர் ஆங்கிலேயர்கள் இரண்டாம் பகதூர் ஷாவை இந்தக் கோட்டையில் சிறையில் அடைத்திருந்தனர். அரசு கைதிகள் துன்புறுத்தப்பட்டது அல்லது சிறையில் மறைந்ததால் இந்தக் கோட்டை இங்கிலாந்தின் இலண்டன் கோபுரத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 "Press Release on Inscription of the Red Fort in the World Heritage List −2007" (PDF). Archaeological Survey of India. Archived from the original (PDF) on 10 April 2009. பார்க்கப்பட்ட நாள் 28 May 2009.
  2. "Commonwealth Games-2010, Conservation, Restoration and Upgradation of Public Amenities at Protected Monuments" (PDF). Red Fort & Salimgarh Fort. Archaeological Survey of India, Delhi Circle. 2006. pp. 37–38 & 40. Archived from the original (pdf) on 11 October 2011. பார்க்கப்பட்ட நாள் 5 June 2009.
  3. Dr. Akbar Ahmed. "The Trial of Dara Shikoh:A Play in Three Acts" (PDF). The Buxton Readings. p. 53. Archived from the original (PDF) on 23 February 2012.
  4. "Memories of Ferghana". பார்க்கப்பட்ட நாள் 31 May 2009. MUSIC and dance? But wasn't that unIslamic in a country celebrating an Islamic revival, I'd thought back then, as I twirled at an Uzbek soiree at Kokand in the Ferghana Valley. My hostess had snatched up a daf (dafli in India) and was dancing slowly to a sad Persian song by Zebunissa 'Makhfi', an Uzbek-Tajik favourite. She was a princess of Delhi via Ferghana; Aurangzeb's daughter, whom he jailed for 20 years in Salimgarh, next to the Red Fort, because of her Sufi sympathies. Aurangzeb had killed music in his realm. Zebunissa's voice sang in her ancestral homeland, though lost to Delhi.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலிம்கர்_கோட்டை&oldid=2891786" இலிருந்து மீள்விக்கப்பட்டது