சவ்காத் மிர்சியோயெவ்
சவ்காத் மிரொமோனொவிச் மிர்சியோயெவ் (Shavkat Miromonovich Mirziyoyev, உருசியம்: Шавкат Миромонович Мирзиёев; பிறப்பு: 24 சூலை 1957[1][2]) உசுபெக்கிசுத்தானின் அரசியல்வாதி ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் அரசுத்தலைவராகப் பதவியில் உள்ளார். முன்னதாக இவர் 2003 முதல் அந்நாட்டின் பிரதமராகவும் பதவியில் இருந்தார்.[3][4] to 2016.
சவ்காத் மிர்சியோயெவ் Shavkat Mirziyoyev Шавкат Мирзиёев | |
---|---|
![]() | |
உசுபெகிசுத்தானின் 2வது அரசுத்தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 14 திசம்பர் 2016 பதில்: 8 செப்டம்பர் 2016 – 14 திசம்பர் 2016 | |
பிரதமர் | அப்துல்லா அசிப்பொவ் |
முன்னவர் | இசுலாம் காிமோவ் |
உசுபெக்கிசுத்தான் பிரதமர் | |
பதவியில் 12 திசம்பர் 2003 – 14 திசம்பர் 2016 | |
குடியரசுத் தலைவர் | இசுலாம் காிமோவ் நிகிமத்தில்லா யுல்தாசெவ் (பதில்) அவரே (இடைக்கால) |
துணை | அப்துல்லா அரிப்பொவ் எர்காசு சொயிசுமாத்தொவ் அப்துல்லா அரிப்பொவ் |
முன்னவர் | ஓத்கிர் சுல்தானொவ் |
பின்வந்தவர் | அப்துல்லா அரிப்பொவ் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சவ்காத் மிரொமோனொவிச் மிர்சியோயெவ் 24 சூலை 1957 ஜிசாக், உசுபெக்கிசுத்தான், சோவியத் ஒன்றியம் |
அரசியல் கட்சி | தன்னலமறுப்பு தேசிய சனநாயகக் கட்சி (2008 இற்கு முன்) தேசிய மீளெழுச்சி சனநாயகக் கட்சி (2008–2016) தாராண்மைவாத சனநாயகக் கட்சி (2016–இன்று) |
வாழ்க்கை துணைவர்(கள்) | சிரோத்கோன் ஒசிமோவா |
படித்த கல்வி நிறுவனங்கள் | தாஷ்கந்து வேளாண்மை கல்விக்கழகம் |
உசுப்பெகிசுத்தானின் 1வது அரசுத்தலைவர் இசுலாம் காிமோவ் இறந்த பின்னர், இவர் 2016 செப்டம்பர் 8 முதல் நாட்டின் இடைக்கால அரசுத்தலைவராக நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.[5] பின்னர் தேர்தலில் போட்டியிட்டு 88.6% வாக்குகளைப் பெற்று 2வது அரசுத்தலைவராக 2016 திசம்பர் 14 இல் பதவியேற்றார். அக்டோபர் 2021 இல், உஸ்பெகிஸ்தானின் ஜனாதிபதியாக ஷவ்கத் மிர்சியோயேவ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள் தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-07-12 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120712132611/http://premier.gov.ru/visits/world/6053/info/1809/.
- ↑ "Издательский дом Коммерсантъ". kommersant.ru இம் மூலத்தில் இருந்து 2013-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131104045122/http://www.kommersant.ru/factbook/68880.
- ↑ Brief profile of Mirziyoyev பரணிடப்பட்டது 2007-11-16 at the வந்தவழி இயந்திரம், Radio Free Europe/Radio Liberty.
- ↑ "South Korea, Uzbekistan Sign Uranium Deal", RadioFreeEurope/RadioLiberty, September 25, 2006.
- ↑ "Uzbekistan PM Mirziyoyev named interim president". http://www.bbc.com/news/world-asia-37310718. பார்த்த நாள்: 9-09-2016.
வெளி இணைப்புகள் தொகு
- Government of Uzbekist'on Official Website