சஹார் குல்

ஆப்கனில் தனது கணவனால் வன்முறைக்காளான ஒரு சிறு பெண்

சஹார் குல் (Sahar Gul) (பிறப்பு.1998கள்) ஆப்கானித்தானைச் சேர்ந்த இளம்பெண் ஆவார். சட்டவிரோதமாக சிறுவர் திருமணம் செய்து கொண்டதால் இவர் புலி கும்ரி நகரில் தனது கணவரின் குடும்பத்தால் சித்திரவதைக்கும் வன்முறைக்கும் ஆளானார். 2011ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இவர் மீட்கப்பட்டபோது ஆப்கானித்தானிலும் சர்வதேச அளவிலும் இவரது வழக்கு குறிப்பிடத்தக்கதாகியது.[1] குல் வழக்கு "ஆப்கானிஸ்தானை பயமுறுத்தியது, மேலும் தேசிய ஆன்மா தேடலைத் தூண்டியது" என்று கார்டியன் கூறியது.[2] இவருடைய மூன்று மாமியார்களும் கொலை முயற்சி குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்றம் அவர்களின் தண்டனைகளை ரத்து செய்த பிறகு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.[3] அமெரிக்க வழக்கறிஞரான கிம்பர்லி மோட்லி என்பவர், அவர்களின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் குல் சார்பாக ஆஜரானார்.[4] பின்னர், வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, குல்லின் மாமியார்களும், கணவரும் அவரது சகோதரர்களும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர்.[5] இழப்பீட்டுக்காக குல் அனைத்து தரப்பினருக்கும் எதிராக வழக்குத் தொடரலாம் என்றும் நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. குல் ஒரு பெண்களின் தங்குமிடத்தில் தங்கி குணமடைந்து வருகிறார். மேலும் தான் ஒரு அரசியல்வாதி ஆக வேண்டும் என்றும், பிற பெண்கள் அவதிப்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற லட்சியங்கள் இருப்பதாகவும் கூறுகிறார்.[6]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

சஹார் குல் வடக்கு ஆப்கானித்தானின் ஒரு மலைப்பாங்கான மாகாணத்தில் பதாக்சன் என்ற இடத்தில் வளர்ந்தார்.[6] தந்தையின் மரணத்திற்குப் பிறகு தனது உறவினர்களிடம் வளர்ந்தார். இறுதியில் தன்னுடைய 9 வயதில் மாற்றாந்தாயின் மகனுடன் வாழ ஆரம்பித்தார்.[6] இவர் பசுக்களையும் செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். மேலும், வாதுமை கொட்டை, பாதாமி மரங்களின் பழத்தோட்டத்தில் வேலை செய்தர். மேலும் எரிபொருளுக்காக காய்ந்த சாணத்தையும் செய்தார். இவரது சகோதரரின் மனைவியால் இவர் வெறுக்கப்பட்டார். இவர் சட்டப்பூர்வ திருமண வயதை அடையவில்லை என்றாலும், குல்லின் திருமணத்திற்கு அழுத்தம் கொடுத்தார். 30 வயதான குலாம் சாகி என்பவருடன் இவர் திருமணம் செய்து வைக்கப்பட்டார். சாகி இவருக்காக குறைந்தபட்சம் $ 5,000 ஐ சட்டவிரோதமாக செலுத்தினார்.[6] கல்யாணத்தின் போது குல் படிப்பறிவில்லாதவராகவும் இருந்தார்.[2]

திருமணமும் துன்புறுத்தலும் தொகு

குல், தனது கணவரின் பாக்லான் மாகாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆப்கானித்தான் மகளிர் விவகார அமைச்சகத்தின் அதிகாரிகள், சாகியின் குடும்பம் இவரை விபச்சாரத்தில் ஈடுபடுத்த விரும்பியதாகக் கூறினர்.[2] சாகியின் முதல் மனைவி குழந்தைகளைப் பெறாததால் அவரும் அவரது தாயும் குல்லை துன்புறுத்தி பிறகு இவரை விட்டு சென்றனர். [6]

இவரது துன்புறுத்தலைக் கண்ட அண்டை பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் காவல்துறையினரிடம் புகாரளித்தனர். காவல் துறையினர் சாகியின் குடும்பத்தையும் எச்சரித்தனர்.[6] பின்னர், மறுநாள் கலையில் இவர் உடலில் காயங்களுடன் கண்டறியப்பட்டார்.[6] [7] இவர் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் வைக்கோல் மற்றும் விலங்குகளின் சாணத்தில் கிடந்தார். [2]

திருமணமான ஆறு மாதங்களுக்குப் பிறகு, திசம்பர் 2011 இல், சாகியின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை காவலர்கள் கைது செய்தனர்.[6]

இதையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Afghan child bride had escaped torturers but was sent back". தி கார்டியன். 2 January 2012. https://www.theguardian.com/world/2012/jan/02/afghan-girl-escaped-torturers-sent-back. பார்த்த நாள்: 12 July 2013. 
  2. 2.0 2.1 2.2 2.3 "Afghan judges free three jailed for torture of child bride Sahar Gul". தி கார்டியன். 11 July 2013. https://www.theguardian.com/world/2013/jul/11/afghan-judges-free-sahar-guls-torturers. பார்த்த நாள்: 12 July 2013. 
  3. "Afghan Court Reverses Convictions in Torture of Girl". த நியூயார்க் டைம்ஸ். 4 July 2013. https://www.nytimes.com/2013/07/04/world/asia/afghan-court-reverses-conviction-in-torture-of-young-woman.html. பார்த்த நாள்: 14 July 2013. 
  4. "Sahar Gul: The fears of a tortured Afghan child bride". BBC News. 2013-07-15. https://www.bbc.com/news/world-asia-23311414. பார்த்த நாள்: 2017-03-08. 
  5. Motley, Kimberley, How I defend the rule of law (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2017-03-08
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 6.7 "Wed and Tortured at 13, Afghan Girl Finds Rare Justice". த நியூயார்க் டைம்ஸ். 11 August 2012. https://www.nytimes.com/2012/08/12/world/asia/wed-and-tortured-at-13-afghan-girl-finds-rare-justice.html. பார்த்த நாள்: 14 July 2013. 
  7. "Afghan girl's 'horrifying abuse' exposed by video". 29 December 2011. https://www.bbc.co.uk/news/world-asia-16356247. பார்த்த நாள்: 12 July 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஹார்_குல்&oldid=3277984" இலிருந்து மீள்விக்கப்பட்டது