சாகியா, பீகார்

சாகியா (Chakia ) என்பது இந்தியாவின் பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்திலுள்ள ஒரு முக்கியமான மற்றும் வணிக நகரமாகும். மேலும் இது நகர் ஊராட்சியாகவும் இருக்கிறது. பிரிட்டிசு ஆட்சியின் போது, சம்பாரண் சர்க்கரை ஆலை 1905 இல் இங்கு நிறுவப்பட்டது. கரும்பு ஆலை 1995 முதல் செயலிழந்துள்ளது. அருகிலுள்ள கிராமங்களுக்கான பல நுழைவாயில்களில் சாகியாவும் ஒன்றாகும். துணிமணிகள் மற்றும் உணவு தானியங்கள் கிராமங்களுக்கு சாகியாவிலிருந்து வர்த்தகம் செய்யப்படுகின்றன. சாகியா இப்போது வேகமாக வளர்ந்து வரும் நகரம் ஆகும்.

சாகியா
Bara Chakia
நகரம்
சாகியா is located in பீகார்
சாகியா
சாகியா
Location in Bihar, India
ஆள்கூறுகள்: 26°25′N 85°03′E / 26.42°N 85.05°E / 26.42; 85.05ஆள்கூறுகள்: 26°25′N 85°03′E / 26.42°N 85.05°E / 26.42; 85.05
நாடு இந்தியா
மாநிலம்பீகார்
மாவட்டம்கிழக்கு சம்பாரண் மாவட்டம்
ஏற்றம்52 m (171 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்20,686
மொழிகள்
 • அலுவல்போச்புரி, இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்845412
தொலைபேசி தொடர்பு எண்06257
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுஐ.எசு.ஓ 3166-2:ஐ.என்
வாகனப் பதிவுBR05
மக்களவைத் தொகுதிபூர்வி சாம்பாரண்
மாநிலச் சட்டப் பேரவை தொகுதிபிப்ரா
இணையதளம்Chakia

நதிதொகு

இந்த நகரத்தில் புர்கி கண்டகி என்ற ஒரு நதி உள்ளது. இது கண்டகி ஆற்றின் ஒரு கிளையாறாகும்..

புள்ளிவிவரங்கள்தொகு

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,[1] சாகியாவில் 20,686 மக்கள் தொகையாக இருந்தது. ஆண்கள் 53% மற்றும் பெண்கள் 47% ஆகும். சாகியாவின் சராசரி கல்வியறிவு விகிதம் 51% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விடக் குறைவு; ஆண் கல்வியறிவு 60% மற்றும் பெண் கல்வியறிவு 40%. மக்கள் தொகையில் 20% 6 வயதுக்குட்பட்டவர்கள்.

புத்தமதச் சுற்றுலாதொகு

பாட்னாவிலிருந்து 110 கி.மீ தூரத்தில் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் 104 அடி உயரம் (32 மீ) கொண்ட கேசரியா என்ற தாது கோபுரம் உள்ளது.

குறிப்புகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகியா,_பீகார்&oldid=2979124" இருந்து மீள்விக்கப்பட்டது